முகப்பு Bengaluru ஜன. 8ல் கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் 2025ஆம் ஆண்டுக்கான‌ திருவள்ளுவர் நாள்காட்டி வெளியீட்டு விழா

ஜன. 8ல் கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் 2025ஆம் ஆண்டுக்கான‌ திருவள்ளுவர் நாள்காட்டி வெளியீட்டு விழா

89
0

பெங்களூரு, ஜன. 7: கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் 2025ஆம் ஆண்டுக்கான‌ திருவள்ளுவர் நாள்காட்டி வெளியீட்டு விழா புதன்கிழமை (ஜன.8) மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது.

கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் 2025ஆம் ஆண்டுக்கான‌ திருவள்ளுவர் நாள்காட்டி வெளியீட்டு விழா குயின்ஸ்சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. நாள்காட்டியை வெளியிட்டு, விழாவில் பேருரை ஆற்ற உள்ளார் பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைவர் டாக்டர் வி.இராம்பிரசாத் மனோகர் ஐஏஎஸ்.

தினச்சுடர், சஞ்சேவாணியின் ஆசிரியர் பா.தே.அமுதன் தலைமை ஏற்க உள்ளார். தமிழ் ஆர்வலர் எஸ்.எம்.பழனி வாழ்த்துரை வழங்குகிறார். வரவேற்புரை, நோக்கவுரை, முன்னிலை, நன்றியுரையை கர்நாடக தமிழ்ப் பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் ஆற்ற உள்ளனர்.

விழாவில் தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் நன்கொடையாக திருவள்ளுவர் படம் பொறித்த அழகிய நாள்காட்டியை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்