முகப்பு Bengaluru கர்நாட‌கத்தில் அரசியல் உள்ளிட்ட அதிகாரம் பெற தமிழர்கள் ஒற்றுமையாவது அவசியம்: முனைவர் சி.எஸ்.வேலுபிரபாகரன்

கர்நாட‌கத்தில் அரசியல் உள்ளிட்ட அதிகாரம் பெற தமிழர்கள் ஒற்றுமையாவது அவசியம்: முனைவர் சி.எஸ்.வேலுபிரபாகரன்

5
0

பெங்களூரு, ஜூலை 24: கர்நாட‌கத்தில் அரசியல் உள்ளிட்ட அதிகாரம் பெற தமிழர்கள் ஒற்றுமையாவது அவசியம் என்று சோழர் மன்னர் பரம்பரையின் நிறுவனத் தலைவரும், சேவா ரத்னா முனைவர் சி.எஸ்.வேலுபிரபாகரன் தெரிவித்தார்.

பெங்களூரில் ஜூலை 23 ஆம் தேதி விழாயக்கிழமை மாலை சோழர் மன்னர் பரம்பரை இயக்கத்தின் சார்பில் முனைவர் சி.எஸ்.வேலுபிரபாகரன் தலைமையில் புலிகேசிநகர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த தமிழ்த் தலைவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அதில் முனைவர் சி.எஸ்.வேலுபிரபாகரன் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், கர்நாடகத்தில் தமிழர்கள் குடியேறியவர்கள் என்று கூறுவது முற்றிலும் தவறு. அவர்கள் இந்த மண்ணில் பூர்வகுடிகள். 1956 ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பதற்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலும், சுதந்திரம் பெற்ற பிறகு இந்த மண் சென்னை மாகாணத்தில் இருந்தது. அதற்கு முன்பு கர்நாடகம் உள்ளிட்ட மலேசியா, சிங்கப்பூர், கம்போடியா ஆகிய நாடுகளை சோழர்கள் ஆண்டு கொண்டிருந்தனர்.

அந்த சோழர் மன்னர் பரம்பரையில் வந்தவர்கள் நாம். எனவே இங்கு வாழும் தமிழர்கள் அனைவரும் தமிழர்களுக்கு எந்த தாழ்வு மனப்பான்மையும் வேண்டாம். தேங்காய்நார் உரித்தால் அது வெறும் நார்தான். ஆனால் அதனையே திரித்தால், அந்த கயிறு மூலம் யானையையே கட்டிப்போடலாம். எஙே கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் தேங்காய்நார் போல் பிரிந்து கிடக்காமல், திரித்த கயிறு போல் ஒற்றுமையாகி, நமது பலத்தை காட்ட வேண்டும்.

அப்படி காட்டினால் மட்டுமே இங்கு அரசியல் உள்ளிட்ட அதிகாரப்பதவிகளை பெற முடியும். கர்நாடகத்தின் பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் தமிழர்கள் எம்எல்ஏக்களாக இருந்துள்ளனர். அதேபோல் பெங்களூரின் பல வார்டுகளில் மாமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்து சிறப்பாக பணியாற்றி உள்ளனர்.

ஆனால் இப்போது கர்நாடகத்தில் தமிழர்கள் பல சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் பலத்தில் இருந்தாலும், ஒரே ஒரு எம்எல்ஏ கூட இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. எனவே வரும் காலங்களில் தமிழர்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்தி, அவர்கள் எந்த கட்சியில் வாய்ப்பு, கிடைத்து போட்டியிட்டலும், அவர்களை கட்சி, ஜாதி, மதம் உள்ளிட்டவைகள பார்க்காமல் தமிழ் மொழியால் ஒற்றிணைந்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

எனவே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், முதல் கட்டமாக புலிகேசிநகர் சட்டமன்ற தொகுதியில் தமிழ்த் தலைவர்களை ஒற்று திரட்டி, விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. வரும் காலங்களில் பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகம் முழுவதும் தமிழர்கள் அதிகம் வாழும் சட்டமன்ற தொகுதிகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படும்.

அதன் மூலம் அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளில் தமிழர்கள் வெற்றி பெற்று கோலோச்ச வேண்டும். அதற்கான முன்னெடுப்பை எனது தலைமையிலான சோழர் மன்னர் பரம்பரை இயக்கம் எடுத்துள்ளது. இதற்கு கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஆதரவு தந்து ஒன்றிணைய வேண்டும். நாம் ஒற்றுமையானால், இனி வரும் காலங்களில் வெற்றி மீது வெற்றி வந்து நம்மை சேரும். அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் தமிழர்களைச் சேரும் என்றார்.

நிகழ்ச்சியில் எலஹங்கா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.சிவராஜ், பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், துணைத் தலைவர் அமுத பாண்டியன், எம்.சாந்தகுமார், பி.எம்.வி.ராஜா, எல்.குமார், ஆதர்ஷா ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் செயலாளர் சம்பத், திருமதி வெண்ணிலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்வை தனம் ஏ.வேளாங்கன்னி தொகுத்து வழங்கினார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்