பெங்களூரு, மார்ச் 24: கருநாடக மாநில தி.மு.க. இலக்கிய அணி சார்பில் பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பெங்களூரு அல்சூரில் உள்ள பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் கருநாடக மாநில தி.மு.க. இலக்கிய அணி சார்பில் அதன் செயலாளர் போர்முரசு கதிரவன் தலைமையில், மாநில அமைப்பாளர் ந.இராமசாமி முன்னிலையில் கோலகலமாக கொண்டாடப்பட்டது.

நிகழ்வில் கருநாடக மாநில தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் முருகு தருமலிங்கம் தலைமை வகித்தார். சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளின் இயக்குநர் மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி, தலைமை கழக இலக்கிய அணியின் கவிச்சுடர் கவிதைப்பித்தன், பொருளாளர் அரிமா. நா.சந்திரபாபு, பேராசிரியர் வணங்காமுடி, முன்னாள் எம்.எல்.ஏ கொவி.நன்னன்,

திமுக நிர்வாகிகள் இராஜசேகரன், முருகானந்தம், விகாஷ், ஆ. கரிகாலன், பிரபு சற்குணா இளமதி, மாநில நிர்வாகிகள், இளக்கிய அணி நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், தொ.மு.ச.நிர்வாகிகள், முன்னாள் – இந்நாள் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சி முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் சுப்புலக்குமி தலைமையிலான நாட்யாஞ்சலி நிருத்தியாலயா நாட்டியக்குழுவினரின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கிற்கு முத்துமணி நன்னன் நடுவராக இருந்தார். அதில் அண்ணாவழியில் அயராதுழைப்போம் என்ற தலைப்பில் கருநாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமியும், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்ததே தீருவோம் என்ற தலைப்பில் தங்கவயல் ஸ்ரீதரும்,

இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்ற தலைப்பில் தங்கவயல் கரிகாலனும், மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற தலைப்பில் கலை இலக்கிய பேரவையின் துணைஅமைப்பாளர் கிருஷ்ணகிரி கிரி ஆகியோர் தங்களின் கருத்துகளை பதிவு செய்தனர். நிகழ்ச்சியை ஆ.கரிகாலவளவன் தொகுத்து வழங்கினார். இறுதியில் போர்முரசு கதிரவன் நன்றி தெரிவித்தார்.
































































