பெங்களூரு, செப். 10: ஏழை எளிய மக்களுக்கு உதவுவதன் மூலம் சமூக சேவை செய்வது எனது நோக்கம் என்று விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் அமைப்புச்சாரா பிரிவும் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளருமான பையப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் தெரிவித்தார்.

பெங்களூரு சி.வி.ராமன் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பையப்பனஹள்ளியில் செவ்வாய்க்கிழமை (செப்.11) பையப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் தனது இல்லத்தில் பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடினார். அவரது பிறந்தநாளையொட்டி, பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், செயலாளர் கோபிநாத்,

காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சாந்திநகர் நந்தகுமார், விஸ்வநாதன், பசவனகுடி சாயாகௌடா, நாம் சோழர்கள் சர்வதேச தலைவர் ஜெயபிரகாஷ் குருஜி, திருமலை, கோபி உள்ளிட்ட ஏராளமான நண்பர்கள், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பையப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் பிறந்த நாளையொட்டி ஏழை பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல வந்த அனைவருக்கும் சிற்றுண்டி, தேநீர், குளிர்பானம், மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

பின்னர் பேசிய பையப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ், எனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள், சகோதர, சகோதரிகள், பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது பிறந்த நாளில், ஏழை, எளிய மக்களின் மேம்பாட்டிற்கு உதவுவதும், காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும் உறுதி பூண்டுள்ளேன். அதே நேரத்தில் மாநிலத்தில் தமிழர்களின் வளர்ச்சிக்காவும் பாடுபடுவேன். உலகில் உள்ள அனைத்து மக்களின் வாழ்வியலுக்கு தேவையான கருத்துகளை தனது திருக்குறள் மூலம் வழங்கி உள்ள திருவள்ளுவரை கர்நாடகம் மட்டுமின்றி, உலகளவில் கொண்டு செல்ல அயராது பாடுபடுவேன் என்றார்.

பின்னர் மாலை, பிறந்தநாளையொட்டி அல்சூர் சுப்ரமணியர் கோவிலில் தனது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்களுடன் சிறப்பு பூசை செய்த டி.ரமேஷ், அங்கிருந்த அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரை இழுத்து, நேர்த்திக் கடன செலுத்தினார். இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்களும் அவருக்கு பிறந்த நாள் வழ்த்து தெரிவித்தார். சிறப்பு பூஜையில் பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் செயலாளர் வா.ஸ்ரீதரன், கவிப்பிரியா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
































































