பெங்களூரு, ஜன. 4: பெங்களூரு கே.ஜி.ஹள்ளி கருமாரியம்மன்நகர் இந்தியன் சில்ட்ரன் ஆங்கிலப் பள்ளியின் ஆண்டு விளையாட்டு தினம் வெள்ளிக்கிழமை கோலாகலமாக பெரியார் நகர் கால்பந்து மைதானத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை காவல் துறையின் பிரபல முக்கிய தலைவர்களின் பாதுகாப்பு படையின் போலீஸ் துணை ஆணையர் மஞ்சுநாத் பாபு கேஎஸ்பிஎஸ் அவர்கள் முக்கிய விருந்தினராக பங்கேற்று கொடியேற்றி துவக்கி வைத்தார். இதில் லஞ்ச ஒழப்புத்துறை இயக்கத்தை சேர்ந்த ஜூலி கிறிஸ்டி, சகாயராஜ், காந்திலால், மற்றும் சேர்மன் தவுசீப் ஷெரிப், புலிகேசி நகர் பாஜக தலைவர் முரளி, பீம் ஆர்மி மாநிலத் தலைவர் சுந்தர் ஆதிமூலம், கர்நாடக ரக்ஷன யுவ படையை சேர்ந்த மாநில தலைவர் லயன் டாக்டர் சதீஷ், செயலாளர் ஈஸ்வர் ராவ், துணைத் தலைவர்கள் சுபாஷ், அஸ்கர், மதர் தெரசா டிரஸ்டின் ஆபிரஹாம் சின்னி,

முன்னாள் தேசிய மற்றும் ஈஸ்ட் பெங்கால் கால்பந்து வீரர் சரவணன், சிஐஎல் கால்பந்து அணியின் பயிற்சியாளர் இனியன் , டிஎஸ்எஸ் சுப்பிரமணி, கவிதா நாயுடு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அனைவரையும் பள்ளியின் செயலாளர் கே.விஜயகுமார் முன்னின்று அனைவரையும் வரவேற்று சிறப்பித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் லோகேஷ் கவுடா அவர்கள் பொறுப்பில் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழாண்டு விளையாட்டு ஆண்டு விழா நிகழ்ச்சியை கர்நாடக மாநில நிதி கழகத்தின் முன்னாள் மேலாளர் மற்றும் கேஆர்ஒய்பியின் முக்கிய ஆலோசகர் திருநாவுக்கரசு தொகுத்து வழங்கி முக்கிய விருந்தினர்களுக்கு சிறப்பு செய்வதற்கு உதவி புரிந்தார். வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பதக்கங்களும் பாராட்டு பாத்திரங்களும் வழங்க பட்டது. முன்னதாக மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. பெற்றோர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
































































