முகப்பு Bengaluru திருவள்ளுவர் சங்கத்தின் தலைவராக எஸ்.டி.குமார் பொறுப்பேற்பு

திருவள்ளுவர் சங்கத்தின் தலைவராக எஸ்.டி.குமார் பொறுப்பேற்பு

88
0

பெங்களூரு, டிச. 6: திருவள்ளுவர் சங்கத் தலைவராக தாய்மொழிக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 5) பொறுப்பேற்றுக் கொண்டார்.

பெங்களூரு ஸ்ரீராமபுரத்தில் உள்ள திருவள்ளுவர் சங்கத்திற்கு தலைவராக எஸ்.டி.குமார் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார். இந்நிகழ்வோடு அச்சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் ஆமா வேணுகோபால், கி.சு. இளங்கோவன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் புதிய தலைவராக தாய்மொழி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ். டி குமார் பொறுப்பேற்றார். அவருக்கு நிர்வாகிகள் தலைப்பாகை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து
எஸ்.டி.குமார் பேசியது: பெங்களூரில் மிகவும் பழமை வாய்ந்த திருவள்ளுவர் சங்கத்துக்கு என்னை தலைவராக தேர்ந்தெடுத்த சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

என்னுடைய முதல் வேலையாக அல்சூர் ஏரிக்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு திருவள்ளுவர் தினத்தையொட்டி மாலை அணிவிக்கப்படும். விஸ்வகவி திருவள்ளுவர் சங்கம் சார்பாக நடக்கும் திருவள்ளுவர் தின விழாவில் அனைத்து தமிழ் அமைப்புகளும் கலந்து கொண்டு திருவள்ளுவருக்கு சிறப்பு செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

அதேநேரம் கட்சி, சாதி, மதம் என்று பாராமல் அனைவரும் தமிழராக ஒன்று திரள‌ வேண்டும். கடந்த காலங் களை போல் எந்த கட்சி கொடியையும், அரசியல் தலைவர்களின் படங்களை யும் பயன்படுத்தாமல், திருவள்ளுவருக்கு மட்டுமே சிறப்பு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார்.

நிகழ்ச்சியில் சங்கச் செயலாளர் பிரபாகரன், இணை செயலாளர் ஆர்.எஸ்.மணி, துணை தலைவர் ர‌ங்கநாதன், பொருளாளர் ஜெய‌வேலு. கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந. இராமசாமி, எம்ஜிஆர் மன்ற முன்னாள் செயலாளர் சடகோபன் உள்பட செயற்குழு மற்றும் பொதுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்