பெங்களூரு, செப் 17: உயிர் அறிவியல் நிறுவனங்களுக்கான மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப ஆலோசனையில் உலகளாவிய முன்னணி நிறுவனமான, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த டென்த்பின் மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட்ஸ், இன்று பெங்களூரில் ஒரு புத்தாக்க மையத்தைத் தொடங்குவதாக அறிவித்தது. இது, மேம்பட்ட சிகிச்சைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு உலகளாவிய சிறப்பு மையமாகும். இது, நிறுவனங்கள் சிக்கலான மரபணு, செல் மற்றும் திசு சிகிச்சைகளை விரைவுபடுத்தி, அவற்றை உயிர்காக்கும் மருந்துகளாக மாற்ற உதவும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் சார்ந்த தீர்வுகளை வழங்குகிறது.
ஆழ்ந்த அறிவியல் நிபுணத்துவம் மற்றும் தொழில்துறையில் முன்னணி தொழில்நுட்பக் கூட்டாண்மைகளை ஒன்றிணைப்பதன் மூலம், இந்த மையம் உயிரித்தொழில்நுட்ப மற்றும் மருந்து நிறுவனங்களுக்கு, ஆரம்பகட்ட ஆராய்ச்சி மற்றும் செயல்முறை மேம்படுத்தல் முதல் விரிவாக்கம், உற்பத்தி மற்றும் ஒழுங்குமுறை தயார்நிலை வரையிலான மாற்றப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆதரவளிக்கும் ஒரு புத்தாக்க மையமாகச் செயல்படுகிறது.
இது, சந்தைக்கு வரும் நேரத்தைக் குறைத்து, அதே நேரத்தில் மிக உயர்ந்த தரத்தையும் நிலைநிறுத்துகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான பகுப்பாய்வுகள், முன்கணிப்பு மாதிரியாக்கம் மற்றும் கிளவுட் அடிப்படையிலான கூட்டுப்பணி கருவிகள் மூலம், இந்த மையம் விரைவான முடிவெடுத்தல், சிறந்த மறுஉருவாக்கம் மற்றும் வளங்களின் திறமையான பயன்பாட்டை சாத்தியமாக்குகிறது. இதன்மூலம், மிகவும் தேவைப்படும் நோயாளிகளுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் சிகிச்சைகளைக் கொண்டுவர உதவுகிறது.
கோரமங்கலாவில் உள்ள குளோபல் டெக் பார்க்கில் அமைந்துள்ள இந்த அதிநவீன மையத்தை, டென்த்பின் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகக் குழுத் தலைவர் திரு ஜுர்கன் பாயர், டென்த்பின் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர் திரு. மைக்கேல் ஷ்மிட் மற்றும் டென்த்பின் இந்தியாவின் பங்குதாரர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு சச்சின் பூரே ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.
புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம் உயிர் அறிவியல் துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால், வளர்ந்து வரும் சந்தைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிறுவனங்களுக்கு புதுமையான டிஜிட்டல் தீர்வுகள் தேவைப்படுகின்றன. பெங்களூருவில் உள்ள டென்த்பின் நிறுவனத்தின் புத்தாக்க மையம், தனித்துவமான தீர்வுகளை உருவாக்கி, இன்றைய தொழில்துறை தேவைகளை எதிர்கொள்ளவும் எதிர்காலத்திற்குத் தயாராகவும் நிறுவனங்களுக்கு உதவும் சேவைகளை வழங்குவதன் மூலம் இந்த சவால்களைச் சந்திப்பதில் கவனம் செலுத்துகிறது.
முன்னணி கிளவுட் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தப் புத்தாக்கங்கள், மருந்துத் துறை, உயிரித் தொழில்நுட்பம், சுகாதாரத் துறை, கால்நடை சுகாதாரத் துறை மற்றும் CDMO-க்கள் ஆகியவற்றின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதோடு, இந்த வணிகங்களுக்கு இன்றியமையாததாக விளங்கும் ஒழுங்குமுறை இணக்கத்தையும் பேண உதவுகின்றன. இந்தப் புத்தாக்க மையம், செயற்கை நுண்ணறிவு, மருத்துவப் பொருட்களின் இணையம் (IoMT), மேம்பட்ட சிகிச்சை மருத்துவப் பொருட்கள் (ATMPs) மற்றும் அறிவார்ந்த மருத்துவ விநியோகச் சங்கிலி போன்ற அடுத்த தலைமுறைத் திறன்களில் கவனம் செலுத்தி, இந்தத் துறைக்கு விரிவாக்கக்கூடிய, எதிர்காலத்திற்குத் தயாரான தீர்வுகளை வழங்கும்.
இந்தத் தொடக்க விழாவில் பேசிய திரு ஜூர்கன் பாயர் (Juergen Bauer) கூறியதாவது: “பெங்களூரில் எங்களின் புதிய அலுவலகம் என்பது வெறும் விரிவாக்கம் மட்டுமல்ல, இது ‘லைஃப் சயின்சஸ்’ (Life Sciences) எனப்படும் உயிர் அறிவியல் துறையின் புத்தாக்க எதிர்காலத்திற்கான ஒரு முதலீடாகும். பெங்களூரில் எங்கள் இருப்பை விரிவுபடுத்துவது, இந்தியத் திறமையாளர்கள் மற்றும் புத்தாக்கத்தின் ஆற்றல் மீது ‘டென்த்பின்’ (Tenthpin) கொண்டுள்ள வலுவான நம்பிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

நிபுணத்துவம், தொழில்நுட்பச் சிறப்பு மற்றும் தரத்தின் மீதான ஆழ்ந்த அர்ப்பணிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம், இந்தியாவின் செயல்பாடுகள் எங்கள் உலகளாவிய சேவை வழங்கல் மாதிரியின் (global delivery model) ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கின்றன.” மேலும் அவர், “உலகளாவிய உயிர் அறிவியல் நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை நடத்தும் விதத்தை மறுவரையறை செய்வதற்கான ‘டென்த்பின்’-ன் நோக்கத்துடன், இந்தியாவின் சிறப்பான திறமையாளர்கள் மற்றும் ஆழ்ந்த தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியவை கச்சிதமாகப் பொருந்துகின்றன.
புனே மற்றும் ஹைதராபாத்தில் உள்ள எங்கள் குழுக்களுடன் இணைந்து, பெங்களூரு குழுவானது அறிவார்ந்த, விதிமுறைகளுக்கு உட்பட்ட மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் தீர்வுகளைக் கூட்டாக உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றும். உலகெங்கிலும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உயர்தர சேவைகள் மற்றும் அடுத்த தலைமுறை டிஜிட்டல் தீர்வுகளை வழங்குவதன் மூலம், சிறப்பான சேவையை அளிப்பது மட்டுமல்லாமல், ஒத்துழைப்பு, படைப்பாற்றல் மற்றும் நீண்டகால மதிப்பை வளர்க்கும் ஒரு புத்தாக்க மையத்தை (Innovation hub) விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று கூறினார்.
பெங்களூரில் உள்ள இந்த புத்தாக்க மையமானது, வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் சூழலில் உயிர் அறிவியல் நிறுவனங்கள் சிக்கல்களை எளிதாக்கவும், விதிமுறைகளுக்கு இணங்கவும், திறம்பட விரிவடையவும் உதவும் அடுத்த தலைமுறை ஏஐ-சார்ந்த தயாரிப்புகள் மற்றும் ‘ஆக்சிலரேட்டர்களை’ (accelerators) மேம்படுத்துவதற்கும் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவருவதற்கும் ஒரு உலகளாவிய மையமாகச் செயல்படும். இந்தியாவில் உயிர் அறிவியல் துறையின் முன்னேற்றத்தை முன்னெடுப்பதற்காக, உள்ளூர் ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில் கூட்டாளர்களுடனும் இந்த மையம் இணைந்து செயல்படும்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு மைக்கேல் ஷ்மிட் (Michael Schmidt) கூறியதாவது: “பெங்களூரில் எங்கள் புதிய அலுவலகத்தைத் திறப்பது ‘டென்த்பின்’-ன் உலகளாவிய வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்தியாவின் சேவை வழங்கல் தலைமையகமாக, உலகெங்கிலும் உள்ள எங்கள் உயிர் அறிவியல் வாடிக்கையாளர்களுக்குப் புதுமையான மற்றும் உயர்தர தீர்வுகளை வழங்குவதில் பெங்களூரு முக்கியப் பங்காற்றுகிறது.
சாப் தொகுதி வெளியீட்டு மையம் (BRH), சாப் அறிவார்ந்த மருத்துவ வழங்கல் மேலாண்மை (ICSM)மற்றும் சாப் மேம்பட்ட சிகிச்சை ஒருங்கிணைப்பு (ATO) ஆகியவற்றில் உள்ள ஆழ்ந்த நிபுணத்துவம் மற்றும் ‘டென்த்பின்-ன் சொந்த ஏஐ-சார்ந்த, ஜிஎக்ஸ்பி-க்குத் தயாரான மென்பொருள் தீர்வுகள் ஆகியவற்றைக் கொண்டு, உயிர் அறிவியல் துறையில் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்தும் எங்கள் திறனை இந்த மையம் வலுப்படுத்தும்.”
மேலும் அவர், “சிறப்பு, புத்தாக்கம் மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றின் மீதான எங்கள் அர்ப்பணிப்பை இந்தியாவில் உள்ள எங்கள் குழு பிரதிபலிக்கிறது; இதன் மூலம் சாப் மாற்றங்கள் மற்றும் உயிர் அறிவியல் கிளவுட் (cloud) தீர்வுகளுக்கான உலகளாவிய அளவுகோலை ‘டென்த்பின்’ தொடர்ந்து நிலைநிறுத்துவதை உறுதி செய்கிறது” என்று குறிப்பிட்டார்.
“உள்ளூர் திறமையாளர்களின் உதவியுடன், இந்திய உயிர் அறிவியல் (Life Sciences) நிறுவனங்கள் புத்தாக்கத்தில் உலகளாவிய முன்னணியாளர்களாகத் திகழ உதவவும் நாங்கள் இலக்கு கொண்டுள்ளோம்” என்று திரு சச்சின் புரே கூறினார்.
“பெங்களூருவில் உலகத்தரம் வாய்ந்த திறமையாளர்கள் உள்ளனர்; இத்திறமையாளர்கள் மற்றும் நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, புதிய தயாரிப்புகளைச் சந்தைக்குக் கொண்டுவரும் வேகத்தையும் புத்தாக்கத்தையும் பெருமளவில் மேம்படுத்த உதவும். பெங்களூருவில் எங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தற்போதைய பணியாளர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் தகவல்களுக்கு, https://tenthpin.com என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.






























































