முகப்பு Bengaluru பெங்களூரில் ஜூலை 5ல் ஏழாவது உலகத் திருக்குறள் மாநாடு: அறிவியல் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு

பெங்களூரில் ஜூலை 5ல் ஏழாவது உலகத் திருக்குறள் மாநாடு: அறிவியல் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு

76
0

பெங்களூரு, ஜூலை 4: பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) ஏழாவது உலகத் திருக்குறள் மாநாட்டை அறிவியல் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தொடக்கி வைக்க உள்ளார்.

பெங்களூரு புனித ஜோசப் பல்கலைக்கழகக் கழகத்தில் ஜூலை 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏழாவது உலகத் திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இஸ்ரோ முன்னாள்ள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று, மாநாட்டை தொடக்கி வைக்க உள்ளார்.

பெங்களூர் திருவள்ளுவர் சங்கம், புனிதர் ஜோசப் பல்கலைக்கழகம், மற்றும் தாய் மொழி கூட்டமைப்பு இணைந்து ஜூலை 5 ஆம் தேதி ஏழாவது உலகத் திருக்குறள் மாநாட்டை நடத்துகின்றன. பெங்களூர் சாந்திநகர் லாங்ஃபோர்டு சாலையில் உள்ள புனிதர் ஜோசப் பல்கலைக்கழகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை இந்த மாநாடு நடை பெற உள்ளது.

இந்த மாநாட்டை இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கவுடா, செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விக்டர் லோபோ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில் வெளிநாட்டைச் சேர்ந்த திருக்குறள் ஆர்வலர்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். ஏழாவது உலகத் திருக்குறள் மாநாட்டில் ‘திருக்குறள் உணர்த்தும் உலக அமைதியும் மாந்தநேய மாண்புகளும்’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூலை பத்மஸ்ரீ முனைவர் மயில்சாமி அண்ணாதுரை வெளியிட, பெங்களூர் திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் முனைவர் எஸ்.டி. குமார் பெற்றுக் கொள்கிறார்.

மாநாட்டில், சோழ, பாண்டியர் அரங்கத்தில் 80க்கும் மேற்பட்ட திருக்குறள் தொடர் ஆய்வுக் கட்டுரைகளை தமிழ் பேராசிரியர்கள் சமர்ப்பித்துள்ளனர். பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட அசல் திருக்குறள் நூல்கள், கண்ணாடிப் பேழையில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. திருக்குறளை மொழி பெயர்த்தவர்களைப் பாராட்டி பரிசு வழங்கப்படுகிறது. கலந்து கொள்ளும் முக்கிய பிரமுகர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட உள்ளனர். மாநாட்டிற்கான ஏற்பாடுகளை முனைவர் எஸ்.டி.குமார் தலைமையில், பேராசிரியர் சரளா ஆறுமுகம் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்