பெங்களூரு, ஜூலை 2: பெங்களூருவில் உள்ள புனிதர் ஜோசப் பல்கலைக் கழகத்தில் வரும் 5ம் தேதி 7-வது உலக திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது.
பெங்களூரு புனிதர் ஜோசப் பல்கலைக்கழகம், தாய் மொழி கூட்டமைப்பு மற்றும் திருவள்ளுவர் சங்கம் இணைந்து ஜூலை 5 ஆம் தேதி 7-வது உலக திருக்குறள் மாநாட்டை நடத்துகிறது. புனிதர் ஜோசப் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டை தமிழக அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு தொடங்கி வைக்கிறார்.
இம்மாநாட்டில் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் நாராயணகவுடா, செயிண்ட் ஜோசப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் விக்டர் லோபோ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 85க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் திருக்குறள் தொடர்பான தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். மாநாட்டிற்கான ஏற்பாடுகளை பெங்களூரு திருவள்ளுவர் சங்கத்தின் தலைவரும், தாய் மொழி கூட்டமைப்பின் தலைவருமான முனைவர் எஸ்.டி.குமார் செய்து வருகிறார்.






























































