முகப்பு Bengaluru புனிதர் ஜோசப் பல்கலை, பெங்களூரு திருவள்ளுவர் சங்கம், தாய்மொழிக் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் ஏழாவது உலகத்...

புனிதர் ஜோசப் பல்கலை, பெங்களூரு திருவள்ளுவர் சங்கம், தாய்மொழிக் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் ஏழாவது உலகத் திருக்குறள் மாநாடு

கர்நாடக தமிழர்கள் கவனத்திற்கு முக்கிய பொது அறிவிப்பு

70
0

பெங்களூரு, ஜூன் 8: 2026 ஜூலை 5 ஆம் தேதி புனிதர் ஜோசப் பல்கலைக்கழகம், பெங்களூரு திருவள்ளுவர் சங்கம், தாய்மொழிக் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் ஏழாவது உலகத் திருக்குறள் மாநாடு பெங்களூரு புனிதர் ஜோசப் பல்கலையில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் தமிழ் அமைப்புகள் முன் கூட்டியே, பெங்களூரு திருவள்ளுவர் சங்கத் தலைவரும், தாய்மொழிக் கூட்டமைப்பு தலைவருமான முனைவர் எஸ்.டி.குமார் அவர்களின் கைபேசி எண்: 9343765448 க்கு தொடர்பு கொண்டு முன்கூட்டியே தகவல் அளிக்க வேண்டும். அப்படி தொடர்பு கொள்பவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

2026 ஜூலை 5 ஆம் தேதி நடைபெறும் உலகத் திருக்குறள் மாநாட்டில் அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் உணவு வசதி ஏற்பாடு செய்யப்படும். கர்நாடக மாநிலத்தின் மற்ற மாவட்ட தமிழ் அமைப்புகள் முன்கூட்டியே (ஒரு வாரத்திற்குள்) வருகிறவர்கள் பெயர், முகவரி கைபேசி எண், தமிழ் அமைப்பின் பெயரை அனுப்பவும். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, தங்குமிடம், உணவு ஏற்பாடுகள் செய்து தரப்படும் என‌ பெங்களூரு திருவள்ளுவர் சங்கத் தலைவரும், தாய்மொழிக் கூட்டமைப்பு தலைவருமான முனைவர் எஸ்.டி.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்