முகப்பு Special Story திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் தமிழ் மரபு நடன போட்டி: குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார் முனைவர்...

திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் தமிழ் மரபு நடன போட்டி: குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார் முனைவர் எஸ்.டி.குமார்

65
0

கோலார் தங்கவயல், நவ. 26: தங்கவயல் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை ஏற்பாட்டில் நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் தமிழ் மரபு நடன போட்டியை பெங்களூர் திருவள்ளுவர் சங்கத் தலைவரும், தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான, முனைவர்.எஸ்.டி.குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

கர்நாடக மாநிலம், கோலார் தங்கவயல், மொய்து மஹால், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சாலையில் புதன்கிழமை (நவ. 26) நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை ஏற்பாட்டில் நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் தமிழ் மரபு நடன போட்டியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த பெங்களூர் திருவள்ளுவர் சங்கத் தலைவரும், தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான முனைவர்.எஸ்.டி.குமார், அதைத் தொடர்ந்து சிறப்புரையாற்றினார்.

சிறப்புரையில், தமிழ் மொழியின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் திருக்குறள் எங்கள் வாழ்க்கைக்கு ஒளிக்கதிராய் விளங்குகிறது. அந்த ஒளிக்கதிரை குறிக்கோளாகக் கொண்டு நடைபெறும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி இன்று சிறப்பாக நடைபெறுகிறது. இத்துடன், நம் பாரம்பரியத்தையும், மரபையும், பண்பாட்டையும் மேலேத்தி நிறுத்தும் தமிழ் மரபு நடனப் போட்டியும் இன்று ஒரே மேடையில் நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

ஒளி என்பது அறிவின் அடையாளம். இருள் நீக்கி ஒளி பரப்பும் குத்துவிளக்கு நம் நல்ல தொடக்கத்தையும் வெற்றிக்கான வழியையும் குறிக்கிறது. ஆகவே இந்நிகழ்வை சிறப்புற தொடங்குவதற்காக குத்துவிளக்கை ஏற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். நிகழ்வில் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறையை சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்