பெங்களூரு, அக். 2: ஜே பி நகர் 2வது ஸ்டேஜ் மாரேனஹள்ளி ஸ்ரீ தேவி சல்லாப்புரம்மா மற்றும் ஸ்ரீ தேவி ரேணுகா எல்லம்மா கோவிலில் 10வது நாள் நவராத்திரி சிறப்பு பூஜையில் பக்திப்பாடல்கள் பாடப்பட்டது.

பெங்களூரு ஜே பி நகர் 2வது ஸ்டேஜ் மாரேனஹள்ளி ஸ்ரீ தேவி சல்லாப்புரம்மா மற்றும் ஸ்ரீ தேவி ரேணுகா எல்லம்மா கோவிலில் செப்டம்பர் 22ம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை நவராத்திரி உற்சவம் நடக்கிறது.

இதனையடுத்து செப்டம்பர் 22ம் தேதி முதல் சல்லாப்புரம்மா மற்றும் ரேணுகா எல்லம்மா சிலைகளுக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. 10வது நாளான அக் 1 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை சல்லாப்புரம்மா மற்றும் ரேணுகா எல்லம்மாவிற்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

சிறப்பு பூஜையை சிவராம் குடும்பத்தினர் மற்றும் மாரேனஹள்ளியை சேர்ந்தவர்கள் கூட்டாக செய்திருந்தனர். பூஜைக்கு முன்னாள் கார்பரேட்டர் சந்திரசேகர் ராஜு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிறப்பு பூஜையையொட்டி, பக்திப்பாடல்கள் பாடப்பட்டன.
































































