முகப்பு Bengaluru மாணவர்கள் நீதி, நேர்மையோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டும்: பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ்

மாணவர்கள் நீதி, நேர்மையோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டும்: பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ்

121
0

பெங்களூரு, ஆக. 15: மாணவர்கள் நீதி, நேர்மையோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் தெரிவித்தார்.

பெங்களூரில் வியாழக்கிழமை 78 வது சுதந்திர தினத்தையொட்டி பைப்பனஹள்ளியில் உள்ள சாந்திநிகேதன் கல்வி நிறுவனத்தின் பள்ளி, எச்ஏஎல் விமானப்புராவில் உள்ள தேவாணியம்மாள் தமிழ்ப்பள்ளி மற்றும் குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகம், கோவிந்தபுராவில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் அமைப்பு ஆகியவற்றில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் கலந்து கொண்டு, மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

தேவாணியம்மாள் தமிழ்ப்பள்ளி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது: கர்நாடகத்தில் தமிழ் மட்டுமின்றி கன்னட மொழி பயிலும் பள்ளிகளும் நலிந்து வருகின்றன. இருப்பினும் இந்த தமிழ்ப் பள்ளியை தொடர்ந்து சிறப்பாக நடத்தி வருவதற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

மாணவர்கள் இந்தியாவின் எதிர்காலம். எனவே அவர்கள் நீதி, நேர்மையோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டும். பெற்றோர், ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி தங்களின் எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், சுதந்திர நாடாகவும் உள்ளது. இந்தியாவின் சுதந்திரத்திற்காக பலர் தங்களின் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகத்தை இன்று நாம் நினைவில் கொண்டு, போற்ற‌ வேண்டும்.

கர்நாடகத்தில் தமிழர்கள் அரசியலில் வெற்றி பெறுவது எளிதான காரியமல்ல. இருப்பினும் அடிமட்டத்தில் இருந்து அதில் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி, பல்வேறு பிரச்னைகளை கடந்து, உயர்ந்த இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். சமூக சேவைகளிலும் என்னை ஈடுபடுத்திக் கொண்டு, பலருக்கு உதவி வருகிறேன்.

இந்த தமிழ்ப் பள்ளியின் ஆசிரியர்களையும், மாணவர்களையும் கண்டு நான் பெருமிதம் கொள்கிறேன். இந்த பள்ளிக்கு தேவையான உதவிகளை நான் செய்வதோடு, அரசிடமும் கேட்டு பெற்றுத் தருகிறேன். கர்நாடகத்தில் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி அனைவரும் என்னை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம். என்னால் ஆன உதவிகளை அவர்களுக்கு செய்து தருவேன் என்றார்.

நிகழ்ச்சியில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை லதா, ஆசிரியைகள் வரலட்சுமி, சாந்தி, லீமா, சுதா, ஷாலினி, தேவி விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தைச் சேர்ந்த சீனிவாசன், கோபி, ராஜா, கவிஞர் தேன்மொழியான், கவிஞர் ராமகிருஷ்ணன், தமிழ் ஆர்வலர்கள் கோவலன், ராஜகுரு, ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்