முகப்பு Bengaluru ஸ்ப்ரின்ட்ஃபெஸ்ட் 2026: ரூ.40 லட்சம் நிதி திரட்ட மாணவர்கள் இலக்கு

ஸ்ப்ரின்ட்ஃபெஸ்ட் 2026: ரூ.40 லட்சம் நிதி திரட்ட மாணவர்கள் இலக்கு

ஒடுக்கப்பட்ட குழந்தைகளின் சுகாதாரம் மற்றும் கல்விக்கு உதவ இந்நிதி பயன்படுத்தப்பட உள்ளது தொடக்க விழாவின் அடையாள நடைப்பயணத்தில் ஓட்டப்பந்தயத்திற்கான பதக்கம் மற்றும் டி-ஷர்ட் அறிமுகம்

94
0

பெங்களூரு, மார்ச் 27: பிரிகேட் அறக்கட்டளையின் ஒரு முன்னெடுப்பான ‘தி பிரிகேட் ஸ்கூல்ஸ்’, வெள்ளிக்கிழமை (மார்ச் 27) ஒரு அடையாள நடைப்பயணத்தை நடத்தியது. விளையாட்டு உணர்வையும் சமூகப் பொறுப்புணர்வையும் இணைக்கும், மாணவர்களால் முன்னெடுக்கப்படும் தனித்துவமான முயற்சியான, அதன் முதன்மையான ஓட்டப்பந்தய நிகழ்வு ‘ஸ்ப்ரின்ட்ஃபெஸ்ட் 2026’-இன் அதிகாரப்பூர்வ தொடக்கத்தை குறிக்கும் வகையில் இந்த நடைப்பயணம் அமைந்தது.

பள்ளிகள், பொதுமக்கள் மற்றும் தொழில்முறை ஓட்டப்பந்தய வீரர்கள் என அனைவருக்கும் திறந்திருக்கும் இந்த ஓட்டப்பந்தயம், 2026 ஆகஸ்ட் 9 ஆம் தேதி, (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. ஓட்டப்பந்தயம் செயின்ட் ஜோசப் இந்தியன் உயர்நிலைப் பள்ளி மைதானத்திலிருந்து தொடங்கி, கப்பன்பூங்கா மற்றும் வெங்கடப்பா ஆர்ட் கேலரி வழியாகச் சென்று, மீண்டும் செயின்ட் ஜோசப் இந்தியன் உயர்நிலைப் பள்ளி மைதானத்திலேயே நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு ஓட்டப்பந்தயக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 100 தொழில்முறை ஓட்டப்பந்தய வீரர்கள் உட்பட, 200-க்கும் மேற்பட்டோர் இந்தத் தொடக்க ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கின்றன‌ர்.

இந்த ஆண்டின் ஸ்ப்ரின்ட்ஃபெஸ்ட் நிகழ்வு, 1 கி.மீ, 3 கி.மீ, 5 கி.மீ மற்றும் 10 கி.மீ ஆகிய நான்கு பிரிவுகளில் 3,000-க்கும் மேற்பட்ட ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இது நகரின் மிகவும் அனைவரையும் உள்ளடக்கிய சமூக விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாகத் திகழும்.

தி பிரிகேட் ஸ்கூல்ஸின் மூத்த மாணவர்கள், ஸ்ப்ரின்ட்ஃபெஸ்ட் 2026-ஐ ஏற்பாடு செய்வதில் முன்னின்று செயல்படுவார்கள். நிகழ்வு குறித்த பரப்புரை மற்றும் தளவாட ஏற்பாடுகள் முதல் நிதி திரட்டுதல் வரை அனைத்துப் பணிகளிலும் ஈடுபடும் இவர்கள், நிகழ்வு மேலாண்மை மற்றும் சமூகத் தாக்கம் சார்ந்த பணிகளில் விலைமதிப்பற்ற நேரடி அனுபவத்தைப் பெறுவார்கள். இந்த ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்புக் கட்டணங்கள் மற்றும் தொடர்புடைய விளம்பர ஆதரவுகள் (sponsorships) மூலம் சுமார் ரூ.40 லட்சம் நிதி திரட்ட மாணவர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். திரட்டப்படும் இந்நிதி, சமூகத்தில் ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ள குழந்தைகளின் சுகாதாரம் மற்றும் கல்வித் தேவைகளுக்கு உதவப் பயன்படுத்தப்பட உள்ளது.

ஸ்ப்ரின்ட்ஃபெஸ்ட் 2026-இன் விளம்பரத் தூதராக (Brand Ambassador) விளங்கும் பிரிகேட் குழுமத்தின் இணை நிர்வாக இயக்குனர் திருமதி. நிரூபா சங்கர், ஓட்டப்பந்தய நாளன்று வழங்கப்படும் அதிகாரப்பூர்வ டி-ஷர்ட் மற்றும் பதக்கத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். தீவிரமாகப் பயிற்சி மேற்கொள்ளும் ஓட்டப்பந்தய வீரர்களுக்குப் போதுமான கால அவகாசம் அளிக்கும் வகையில், தி பிரிகேட் ஸ்கூல்ஸ் நிர்வாகம் www.brigadeschools.edu.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யும் வசதியைத் தொடங்கியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்