முகப்பு Bengaluru வாஸன் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண்புரை பரிசோதனை முகாம்

வாஸன் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண்புரை பரிசோதனை முகாம்

105
0

பெங்களூரு, ஏப். 23: வாஸன் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண்புரை பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்.25) நடைபெற உள்ளது.

இது குறித்து வாஸன் கண் மருத்துவமனை வெளியிட்டுள்ள குறிப்பு: பெங்களூரு ராஜாஜிநகர், முதலாவது பிளாக், 19 வது முக்கிய சாலை, இலக்கம் 46 இல் உள்ள வாஸன் கண் மருத்துவமனை சார்பில் ஏப். 25 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை இலவச (கண் திரையிடல்) கண்புரை பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் அடங்கிய‌ முகாம் நடைபெற உள்ளது.

மேலும் ஹீமோகுளோபின் அளவு, ஹெபடைடிஸ் பி டெஸ்ட், விழித்திரை, ஏ ஸ்டேன் (அல்ட்ராசவுண்ட் பையோமெட்ரி, ரத்த அழுத்தப் பரிசோதனை, ரத்த சர்க்கரையின் அளவு, சிறுநீரக செயல் குறித்து பரிசோதனை, ஈசிஜி, பி ஸ்கேன், சிறுநீர் தொடர்பான பரிசோதனை ஆகியவையும் இலவசமாக செய்து தரப்படும்.

முகாமைத் தொடர்ந்து மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிகளுக்கு ரூ. 5,000 மதிப்புள்ள அறுவை சிகிச்சைக்கு முந்தைய பரிசோதனைகள் முற்றிலும் இலவசமாக‌ செய்து தரப்பட்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்