முகப்பு Bengaluru முதலியார் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத் வாழ்த்து

முதலியார் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத் வாழ்த்து

6
0
அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத்தை முதலியார் சங்க நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து கூறினர்.

பெங்களூரு, நவ. 4: முதலியார் சங்கத்தில் புதியதாக பதவி ஏற்றுள்ள நிர்வாகிகளுக்கு உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத் வாழ்த்துகள் தெரிவித்தார்.

பெங்களூரு ஆஸ்பான் ரோடு முதலியார் சங்கத்தின் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள செயலாளர் ஏ.எஸ். பிரகாஷ், மசாக் (முதலியார் சங்கம்) தலைவர் உமேஷ்வாசுதேவன், இயக்குநர் (முதலியார் சங்கம்) ரமேஷ் மற்றும் முதலியார் சங்கத்தின் இயக்குநர்கள், உறுப்பினர்கள் பெங்களூரு சிவாஜிநகர் தொகுதி எம்எல்ஏவும் மாநில உணவு வினியோக துறை அமைச்சருமான ரிஸ்வான் அர்ஷத்தை மரியாதை நிமித்தமாக செவ்வாய்க்கிழமை (நவ. 3) சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பின் போது முதலியார் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு அமைச்சர் ரிஷ்வான் அர்ஷத் வாழ்த்துகள் தெரிவித்தார். இது குறித்து முதலியார் சங்க நிர்வாகிகள் கூறுகையில், “தொகுதி எம்எம்ஏவும் அமைச்சருமான ரிஸ்வான் அர்ஷத் சிறப்பாக செயல்படுகிறார். அவரின் பணி மேலும் சிறப்படைய வேண்டும் என முதலியார் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகள் தெரிவித்தோம். அது போல் முதலியார் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத் வாழ்த்தியதுடன், அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளையும் தெரிவித்தார் என்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்