பெங்களூரு, அக். 21: பெங்களூரு ராஜ்புத் சங்கத்தின் சார்பில் 37வது ஆண்டு தசரா மகா உற்சவம் கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது.

பெங்களூரு வசந்த்நகரில் உள்ள பெங்களூரு ராஜ்புத் சங்கத்தின் சார்பில் 37வது ஆண்டு தசரா மகா உற்சவம் அக். 11ஆம் தேதி தொடங்கி அக். 21ஆம் தேதி வரை நடைபெற்றது. விழாவின் இறுதி நாளான புதன்கிழமை (அக். 21) மகா விஜயதசமி பூஜை, ஷம்மி பூஜை, தேவதா உத்வாசனம் ஆகியவை நடைபெற்றது. அனைத்து பூஜைகளையும் மல்லிகார்ஜுன சாஸ்திரி நடத்தி கொடுத்தார்.

விஜயதசமி பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கு பிரசாதம், உணவு வழங்கப்பட்டது. பின்னர் பிரமாண்ட ஊர்வலமாக துர்கா தேவி உள்பட சிலைகள் கொண்டு செல்லப்பட்டு, அல்சூரில் உள்ள ஏரிக்கரையில் கரைக்கப்பட்டது.

நிகழ்வில் பெங்களூரு ராஜ்புத் சங்கத்தின் தலைவர் அஜித் சிங், துணைத் தலைவர் டி.ஆர்.பாலாஜி சிங், பொதுச் செயலாளர் பாலாஜி சிங் ஆர், இணைச் செயலாளர்கள் டாக்டர்.என்.சரஸ் சந்திர சிங், பி.என் நாகரத்னா பாய்,பொருளாளர் தினேஷ் சிங் எஸ், செயற்குழு உறுப்பினர் ஹீரா சிங் பல்ராம், டி.எஸ்.கிருஷ்ணா சிங், லட்சுமண் சிங் எஸ். (ஓய்வுபெற்ற டி.சி.பி.), பிரதாப் சிங் (ஓய்வுபெற்ற ஏ.சி.பி.), சந்திர சிங் ஆகியோரும்,

சங்கத்தின் மகளிர் பிரிவைச் சேர்ந்த நாகரத்னா, ஷோபா சிங், சுலேகா எம்.ஜி, துர்கா பாய், ஷிவராணி பாய், மதுமதி, ஆஷா ஆர் சௌஹான், லட்சுமி ஆர். சிங், சகுந்தலா ராம் சிங்,
சகுந்தலா ஆர் சிங், ஷீத்தல் சிங், கோமல் ஆர். சிங், பிரேரனா சிங், லதா பாய் ஜி, ரேகா சிங்,
சுனிதா சிங், பூஜா சிங், மஞ்சுளா பாய், மஞ்சு பி. சிங், பத்மா, பார்வதி சிங், மாலா தேவி, காமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.































































