முகப்பு Bengaluru பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் தமிழில் பேசி, கற்க செய்தால் மட்டுமே நமது மொழி அழியாமல் தழைக்கும்:...

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் தமிழில் பேசி, கற்க செய்தால் மட்டுமே நமது மொழி அழியாமல் தழைக்கும்: முத்துமணி நன்னன்

83
0

பெங்களூரு, ஆக. 4: பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் தமிழில் பேசி, அதை கற்க செய்தால் மட்டுமே நமது மொழி அழியாமல் தழைக்கும் என்று கர்நாடக தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்துமணி நன்னன் தெரிவித்தார்.

பெங்களூரு ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ் கல்வி அறக்கட்டளையின் தமிழ்மன்றத்தின் சார்பில் அப்பள்ளியின் தமிழ்த்துறைத் தலைவர் ஆசிரியர் ஏ. சிவகனி தலைமையில் சனிக்கிழமை (ஆக.2) தமிழைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கர்நாடக தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்துமணி நன்னன், முன்னிலை ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ந‌ந்தகுமார் ஜெயராம், புலவர் கார்த்தியாயினி, கோவிந்தம்மாள் பள்ளியின் தலைமை ஆசியை திருமதி கலையரசி
புகுமுகக் கல்லூரியின் பேராசிரியை சுஜாதா, தமிழாசிரியர்கள் சுமதி, புஷ்பா, பாரதி, கவிதா, விஜயலட்சுமி, சுப்புராஜ் உள்ளிட்ட தமிழைப்படிக்கும் மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மாணவர்கள் ஆசிரியர்கள் எழுதிய சிறுகதை தொகுப்பு மலர் வெளியிடப்பட்டது. இதனை டாக்டர் ந‌ந்தகுமார் ஜெயராம் வெளியிட, முத்துமணி நன்னன் பெற்றுக் கொண்டார். சிறுகதை மல‌ரில் மாணவர்கள் கீர்த்தனா, அருண், சச்சின், ஹாசினி, மோனிஷ், கற்பகவிநாயக், ஸ்ரீஷா, திருமாறன், சாய்சரண், சந்தோஷ்
அருண்குமார், ஆரோக்கிய திவ்ய விக்டோ, கார்னிகா, பூர்விகா, ராகவி, அக்க்ஷயா, தமிழ் ஆசிரியர்கள் எழுதிய சிறுகதைகள் இடம்பெற்றிருந்தன.

தமிழில் பள்ளி மற்றும் கல்லூரியளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஷைலஜா, ஷேரன், அப்சார் திவ்யதர்ஷினி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களால் பாராட்டப்பட்டு, கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் பேசிய முத்துமணி நன்னன், பெங்களூரில் தமிழர்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்ற நோக்கில் ஆர்பிஏஎன்எம்எஸ் பள்ளியை நாராயணசாமி முதலியார் தொடங்கினார். இந்த பள்ளியில் படித்த பல தமிழர்கள் இன்று நல்ல நிலையில், பதவியில் உள்ளனர்.

தமிழைப் பேணி காப்பதில் இந்த பள்ளிக்கும், தமிழ் ஆசிரியர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. தமிழ் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளிடம் வீட்டில் தமிழ் மொழியை பேச வேண்டும். தமிழை தங்கள் குழந்தைகளுக்கு கற்க செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே தமிழ் அழியாமல் தழைக்கும்.

தமிழ் படிப்பதே சிரமமாக உள்ள இந்த சூழலில், தமிழில் சிறுகதை எழுதியுள்ள மாணவர்களின் திறமையை கண்டு நான் வியந்து போனேன். இது போன்று மாணவர்களை ஊக்குவித்த தமிழ் ஆசிரியர்களின் முயற்சியை பாராட்ட வேண்டும். டிசம்பர் மாதம் நடைபெற உள்ள 4 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தகத் திருவிழாவில் சிறுகதை எழுதிய மாணவர்கள் கௌரவிக்கப்படுவார்கள் என்றார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்