முகப்பு Politics பெரியார், அண்ணா, கலைஞர் இல்லை என்றால் சுயமரியாதையை இழந்திருப்போம்: கிருஷ்ணகிரி ஆர்.எஸ்.கிரி

பெரியார், அண்ணா, கலைஞர் இல்லை என்றால் சுயமரியாதையை இழந்திருப்போம்: கிருஷ்ணகிரி ஆர்.எஸ்.கிரி

196
0

பெங்களூரு, செப். 15: பெரியார், அண்ணா, கலைஞர் இல்லை என்றால் சுயமரியாதையை இழந்திருப்போம்: கிருஷ்ணகிரி மாவட்ட திமுகவின் கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவையின் துணை அமைப்பாளர் ஆர்.எஸ்.கிரி தெரிவித்தார்.

பெங்களூரு ராமசந்திரபுரத்தில் உள்ள திமுக தலைமை அலுவகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.15) கர்நாடக திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் அக்கட்சியின் கொடியை திமுகாவின் முன்னாள் பொறுப்பு குழு உறுப்பினர் வி.எஸ்.மணி ஏற்றி வைத்தார். இதற்கு தலைமையை முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் கே.எஸ்.சுந்தரேசன் வகித்தார்.

பின்னர் நடைபெற்ற கூட்டத்திற்கு முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் எ.டி.ஆனந்தராஜ் தலைமை வகித்தார். நிகழ்வில் பெரியார், அண்ணா, கலைஞர் மு.கருணாநிதியின் திரு உருவங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.மாநில அமைப்பாளர் ந.இராமசாமி வரவேப்புரை நிகழ்த்தினார். சிறப்புரை கிருஷ்ணகிரி மாவட்ட திமுகவின் கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவையின் துணை அமைப்பாளர் ஆர்.எஸ்.கிரி ஆற்றினார். மாநில மகளிர் அணி தலைவி சற்குணா நன்றியுரை ஆற்றினார்.

கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய ஆர்.எஸ்.கிரி, பெரியார், அண்ணா, கலைஞர் இல்லை என்றால் சுயமரியாதையை இழந்திருப்போம். பிராமணர்களின் ஆதிக்கத்தால் பின் தங்கிய நிலைக்கு தள்ளப்பட்ட பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நீதி கட்சி தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெரியாரால் தி.க தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அண்ணா தலைமையில் திமுக தொடங்கப்பட்டது. அண்ணாவிற்கு பிறகு, கலைஞர் மு.கருணாநிதியும், அவரைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி, ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி, பின் தங்கியவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக உள்ளனர்.

மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இன்னும் பல ஆண்டுகள் ஆட்சி செய்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், ஒடுக்கப்பட்ட நலிந்த மக்களின் மேன்மைக்கும் பாடுபடுவார்கள். அவர்களின் கரத்தினை திமுகவினர் அனைவரும் பேதம் மறந்து பலப்படுத்த‌ வேண்டும். தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, கர்நாடகத்தில் உள்ள தமிழர்களின் வளர்ச்சிக்கும் தேவையான உதவிகளை திமுக அரசு செய்யும் என்றார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்