முகப்பு Bengaluru தெய்வப்புலவர் விழா: விஸ்வகவி திருவள்ளுவர் சங்க தலைவர் பையப்பனஹள்ளி டி ரமேஷ் அழைப்பு

தெய்வப்புலவர் விழா: விஸ்வகவி திருவள்ளுவர் சங்க தலைவர் பையப்பனஹள்ளி டி ரமேஷ் அழைப்பு

84
0

பெங்களூர், நவ. 22: வழக்கம்போல் திருவள்ளுவர் தின விழாவை அடுத்த ஆண்டு 2025 ஜனவரி 16ஆம் தேதி வெகு விமரிசையாக கொண்டாட விஸ்வகவி திருவள்ளுவர் சங்கம் முடிவு செய்துள்ளது.இந்த விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் பெங்களூர் அலசூர் ஏரிக்கரை அருகே உள்ள திருவள்ளுவர் சிலை வளாகத்தில் வரும் 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது.

இது தொடர்பாக விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத் தலைவரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் பையப்பனஹள்ளி டி.ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகத் தமிழர்களின் அடையாளமாக கர்நாடக தமிழர்களின் முகவரியாக திகழும் தெய்வப் புலவர் அய்யன் திருவள்ளுவர் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் விஸ்வகவி திருவள்ளுவர் சங்கம் சார்பில் உணர்வுபூர்வமாக உண்மையாக எழுச்சி உடன் மகிழ்ச்சி உடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

கர்நாடக தமிழர்களை ஒன்றிணைக்கும் உன்னத திருவிழாவாக இது திகழ்கிறது.எனவே வழக்கம்போல் ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் ஜெயந்தி வெகு சிறப்பாக கொண்டாட முடிவு செய்து இருக்கிறோம்.ஜாதி மத மொழி அரசியல் கட்சி வேறுபாடு இன்றி இந்த விழா கொண்டாடப்படும் காரணம் திருவள்ளுவர் அகில உலகத்திற்கும் சொந்தமானவர் ஒட்டுமொத்த உலகத்திற்கும் நற்செய்தி மக்களை நல்வழி படுத்திய தெய்வப் புலவர்.இந்த முறை நடைபெறும் விழாவில் அரசியல் சார்பற்ற அனைத்து கட்சிகள் அமைப்புகள் பொதுநல சங்கங்கள் தமிழ் சங்கங்கள் இலக்கியவாதிகள் எழுத்தாளர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு விழாவை அலங்கரிக்க ஏற்பாடு செய்யப்படும்.

இந்த விழாவை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருவள்ளுவர் சிலை வளாகத்தில் 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் விஸ்வகவி திருவள்ளுவர் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். இவ்வாறு சங்க தலைவர் டாக்டர் பையப்பனஹள்ளி டி.ரமேஷ் அழைப்பு விடுத்துள்ளார் கொடுத்துள்ளார்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்