முகப்பு Bengaluru திருவள்ளுவர் தினத்தில் ஒரு லட்சம் தமிழர்களை ஒன்று சேர்க்க முயற்சி: பைய‌ப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ்

திருவள்ளுவர் தினத்தில் ஒரு லட்சம் தமிழர்களை ஒன்று சேர்க்க முயற்சி: பைய‌ப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ்

120
0

பெங்களூரு, ஜன. 4: திருவள்ளுவர் தினத்தில் ஒரு லட்சம் தமிழர்களை ஒன்று சேர்க்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்று விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் பைய‌ப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் தெரிவித்தார்.

பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 4) மாலை திருவள்ளுவர் தின விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் பைய‌ப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் மேயர் சம்பத்ராஜ், முன்னாள் தமிழ்ச்சங்க தலைவர் தி கோ தாமோதரன், விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் துணைத் தலைவர் வா. ஸ்ரீதரன், அமைப்புச் செயலாளர் ராஜசேகரன், செயலாளர் ராமச்சந்திரன், துணைச் செயலாளர் திருநாவுக்கரசு, விஸ்வநாதன், பாலகிருஷ்ணன், சரவணன், ராஜேந்திரன், சம்பத், செந்தில்,

தன்னுரிமை மனமகிழ் மன்றம், தலித் அமைப்புகள், திமுகவைச் சேர்ந்த போர்முரசு கதிரவன், தட்சிணாமூர்த்தி, முத்துமணி நன்னன், ராஜகுரு, கோவலன், தேன் மொழியான், உமா மகேஸ்வரி மற்றும் நிர்வாகிகள், தமிழ் அமைப்புகள், தமிழ் ஆர்வலர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் டி.ரமேஷ் பேசியது: ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகிறோம். நிகழாண்டு ஜன. 16 ஆம் தேதி திருவள்ளுவர் தின விழாவை அல்சூர் ஏரிக்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை அருகே கொண்டாட உள்ளோம். விழாவில் கலந்து கொள்ள‌ முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மத்திய அமைச்சர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பாஜக தலைவர் விஜயேந்திரா, பி.சி.மோகன் எம்பி, ரிஸ்வான் அர்ஷத் எம்.எல்.ஏ உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். அவர்களும் கலந்து கொள்வதாக இசைவு தெரிவித்து உள்ளனர்.

திருவள்ளுவர் தினத்தில் தமிழர்கள் மட்டுமின்றி, கன்னட, தெலுங்கு, மலையாள மொழி பேசும் சகோதரர்கள் உள்பட பலரையும் ஒன்றி திரட்டி விழாவை சிறப்பாக கொண்டாடி வருகிறோம். நிகழாண்டு ஒரு லட்சம் ஒரு லட்சம் தமிழர்களை ஒன்று சேர்க்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இது சாத்தியமாகும் என்றும் நம்புகிறோம். தமிழர்கள் ஒன்று சேர இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

தமிழர்கள் கட்சி, ஜாதி, மதம் கடந்து ஒன்றாக சேர்ந்து நமது பலத்தை காட்டினால் மட்டுமே அதிகாரப்பதவிகளில் அமர முடியும். அதிகாரப்பதவியில் அமர்ந்தால் மட்டுமே அனைத்து துறைகளிலும் நமக்கான வெற்றியை பெற முடியும். எனவே தமிழர்கள் திருவள்ளுவர் தின விழாவில் பெரும் திரளாக திரண்டு வந்து விழாவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். திருவள்ளுவர் தமிழர்களின் அறிவின் அடையாளமாக திகழ்கிறார். அவரைக் கொண்டாடும் நிகழ்வில் நாம் பெரும் திரளாக கலந்து கொள்வது அவசியம் என்றார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்