பெங்களூரு, ஜன. 21: திருவள்ளுவர் தினத்திற்கு திரளாக வந்து தமிழர்களின் ஒற்றுமையை காண்பித்த அனைவருக்கும் நன்றி என்று பையப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் தெரிவித்தார்.
விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் பையப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விஸ்வகவி திருவள்ளுவ திருவள்ளுவர் சங்கம் சார்பில் தெய்வப்புலவர் தின பெங்களூரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு புதிய வரலாறு படைக்க காரணமாக இருந்த அனைவருக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந் நன்றி கூற கடைப்பட்டுள்ளேன்.
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்த சர்வ கட்சி தலைவர்கள், அமைச்சர், எம்எல்ஏக்கள், முன்னாள் மாநகராட்சி உறுப்பினர்கள், முன்னாள் முதல்வர், முன்னாள் எம்எல்ஏக்கள், தமிழ் அமைப்புகள் தமிழ் ஆர்வலர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ் பிரமுகர்கள்,
உணர்வுள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறோம்.
உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்த அடையாளமாகவும், கர்நாடக தமிழர்களின் முகவரியாகவும் திகழும் தெய்வப் புலவர் திருவள்ளுவருக்கு பெங்களூர் அலசூர் ஏரிக்கரை வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலை முன்பு நடந்த விழாவிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய கர்நாடக மாநில அரசிற்கும், காவல்துறை இருக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறுகிறோம். இனி வரும் ஆண்டுகளிலும் இதை விட சிறப்பாக திருவள்ளுவர் தினத்தை கொண்டாடி அதன் மூலம் கர்நாடக தமிழர்கள் புதிய எழுச்சி உணர்வு பெற்று ஒற்றுமை அடையவும்,
அந்த ஒற்றுமை மூலம் கர்நாடக தமிழர்கள் அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்களின் முத்திரையை பதிக்கவும் எமது பணி தொடரும் என்று விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் பையப்பனஹள்ளி டி.ரமேஷ், பெங்களூர் தமிழ் சங்க முன்னாள் தலைவரும், விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் கௌரவ தலைவருமான தி.கோ தாமோதரன், பெங்களூர் தமிழ் சங்க முன்னாள் செயலாளரும், விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் துணைத் தலைவருமான வா ஸ்ரீதரன், பொருளாளர் கோபிநாத், செயலாளர் என். ராமச்சந்திரன் மற்றும் சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.































































