பெங்களூரு, டிச. 4: ஜன. 16 ஆம் தேதி அல்சூர் ஏரிக்கரை திருவள்ளுவர் சிலை அருகே தமிழர்கள் ஒற்றுமையாக திரண்டு திருவள்ளுவர் பிறந்த நாளை கொண்டாட வர வேண்டும் என்று விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் பையப்பனஹள்ளி டாக்டர் டி. ரமேஷ் தெரிவித்தார்.
பெங்களூரு அல்சூர் ஏரிக்கரை திருவள்ளுவர் சிலை அருகே புதன்கிழமை (டிச. 3) விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் பையப்பனஹள்ளி டாக்டர் டி. ரமேஷ் தலைமையில் திருவள்ளுவர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு கூறினார். மேலும் ஆண்டுதோறும் திருவள்ளுவர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறோம். அதே போல ஜன. 16 ஆம் தேதி திருவள்ளுவர் பிறந்த அல்சூர் ஏரிக்கரை திருவள்ளுவர் சிலை அருகே கொண்டாட முடிவு செய்துள்ளோம்.
இதனை மேலும் சிறப்பாக கொண்டாட இங்கு வந்துள்ள அனைவரும் ஆலோசனை வழங்க வேண்டும். விழா குறித்து வரும் நாட்களில் மேலும் ஆலோசனைக் கூட்டங்கள் போடப்படும். அதற்கும் தமிழர்கள் திரளாக கலந்து கொண்டு ஆலோசனை வழங்க வேண்டும். இதன் மூலம் எங்கள் பணியை மேலும் சிறப்பாக செய்ய முடியும் என்று நம்புகிறோம் என்றார்.
நிகழ்ச்சியில் பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், வா.ஸ்ரீதரன், கோபிநாத், விஸ்வநாதன், வேலு பிரபாகரன், முத்துமணி நன்னன், பாலகிருஷ்ணன், சரவணன், ராமசந்திரன், திருநாவுக்கரசு, கோவலன், ராஜசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.































































