பெங்களூரு, பிப். 5: அகில இந்திய மனித உரிமை மற்றும் தொழிலாளர் சங்கத்தின் தலைவரும், நாம் சோழர் பரம்பரை நிறுவனருமான டாக்டர் சி எஸ் வேலுபிரபாகரன் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிப். 3ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை சி எம் ஏ கிராண்ட் திருமண மண்டபத்தில், திரைத்துறையைச் சேர்ந்த கலைமாமணி கங்கை அமரன், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பாடகர் கானா பாலா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் அரசியல் பிரமுகர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்பட பெரும் திரளானவர்கள் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர்.
முன்னதாக பிப்ரவரி 2ம் தேதி திங்கள்கிழமை பெங்களூர் காடுகொண்டனஹள்ளி நாகவாரா முக்கியச்சாலையில் உள்ள ஐ யூ இ எம் தமிழ் பெடிட் நினைவு தேவாலத்தில், போதகர்களால் வேலுபிரபாகரனின் சகோதரரின் மகன் வினோத்திற்கும், அஷ்வினிக்கும் பரிசுத்த மெய் விவாகம் நடைபெற்றது.

திருமண வரவேற்பில் திரைத்துறையைச் சேர்ந்த கங்கை அமரன், ஸ்ரீகாந்த் தேவா, கானா பாலா ஆகியோர் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தி, அவர்கள் திரைப்படங்களில் பாடிய, எழுதிய, இசையமைத்த பாடல்களை, அங்கு நடைபெற்ற இசைக் கச்சேரிகளில் பாடினர். இதனால் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள் நடனமாடியும், கைத்தட்டியும் உற்சாகமடைந்தனர்.
திருமண வரவேற்பில் பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், முன்னாள் எம் எல் ஏ அகண்ட ஸ்ரீனிவாஸ் மூர்த்தி, முன்னாள் மேயர் சம்பத்ராஜ், மாமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் பத்மநாபரெட்டி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் அமுதா கோபிசந்தர், தீனதயாளன், காங்கிரஸைச் சேர்ந்த விஸ்வநாதன், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ஜே ஜான்கென்னடி, வில்லியம், விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் பைப்பனஹள்ளி ரமேஷ், எம்ஜிஆர் ரவி, பிரகாஷ், மாநில காங்கிரஸின் செயலாளர் பாலகிருஷ்ணன்,

வா. ஸ்ரீதரன், கோபிநாத், அமுத பாண்டியன், ஆதர்ஷா ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் செயலாளர் சம்பத், செந்தில், ராஜசேகர், கால்பந்தாட்ட பயிற்சியாளர் குணசேகர், திருமலை உள்பட அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். திருமணத்திற்கும், வரவேற்பிக்கும் வந்து மணமக்களை வாழ்த்திய அனைவருக்கும் வேலு பிரபாகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.































































