முகப்பு Politics ஜூலை 13ல் கோலார் தங்கவயல் திமுக சார்பில் கலைஞர் மு.கருணாநிதியின் 102‍ வது பிறந்த நாள்...

ஜூலை 13ல் கோலார் தங்கவயல் திமுக சார்பில் கலைஞர் மு.கருணாநிதியின் 102‍ வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்: திரளாக பங்கேற்க‌ ந.இராமசாமி அழைப்பு

187
0

பெங்களூரு, ஜூலை 7: கோலார் தங்கவயல் திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 102‍ வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஜூலை 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் திரளாக அனைவரும் பங்கேற்க வேண்டும் என மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு: கருநாடக மாநிலம் கோலார் தங்கவயல் திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 102-வது ஆண்டு பிறந்த நாள் விழா கூட்டம் ஜூலை 13 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10-மணி முதல் தங்கவயல் கிங் ஜார்ஜ் அரங்கத்தில் நடைபெறுகிறது.

விழாவில் த. நாராயணமூர்த்தி தமிழ் வாழ்த்து பாடுகிறார். பொன்.சாரங்கபாணி வரவேற்புரை நிகழ்த்துகிறார். மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தலைமை வகிக்கிறார். க.பெருமாள், இரா.ஜெயசூர்யன், மு.பரணி பிரகாஷ், ஜி.ரவீந்திரன், வி.சிவா, பி.முருகன், மதிவாணன், அன்காக் ஆனந்தன், வி.சேகரன், மைக்கேல், பி.எல்.ராஜா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

oppo_1024

வாழ்த்துரையை கு. அருணாசலம் வ. முனிரத்தினம், வழக்கறிஞர் பி. மணிவண்ணன், தொ.மு.சவைச் சேர்ந்த இரா.ரஞ்சித் ஆகியோர் வழங்குகின்றனர். பாவலர் சண்முகம், ஆனைமலை அதிரடி அல்த்தாப். கருநாடக திமுக இலக்கியணி செயலாளர் போர்முரசு கதிரவன், தமிழ்நாடு கிருஷ்ணகிரி கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் ஆர்.எஸ்.கிரி ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

மாநில தொ.மு.ச. பேரவை செயலாளர் த. கண்ணையன் நன்றியுரை ஆற்றுகிறார். விழாவில் நல உதவிகள் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்