முகப்பு Bengaluru சிறப்பான முறையில் நடைபெற்ற ஒளவையார், ஏ.பி.ஜே. அப்துல்கலாம், அ.ம.வேணுகோபால் ஆகியோரின் நினைவுறுத்தும் நிகழ்வு

சிறப்பான முறையில் நடைபெற்ற ஒளவையார், ஏ.பி.ஜே. அப்துல்கலாம், அ.ம.வேணுகோபால் ஆகியோரின் நினைவுறுத்தும் நிகழ்வு

112
0

பெங்களூரு, டிச. 28: திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் முனைவர் எஸ்.டி.குமார் தலைமையில் ஒளவையார், ஏ.பி.ஜே. அப்துல்கலாம், பெங்களூர் திருவள்ளுவர் சங்க முன்னாள் தலைவர் அ. ம. வேணுகோபால் ஆகியோரின் நினைவுறுத்தும் நிகழ்வு பெங்களூர் திருவள்ளுவர் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 28) சிறப்பான முறையில் நடைபெற்றது.

பெங்களூர் திருவள்ளுவர் சங்க முன்னாள் தலைவர் அ. ம. வேணுகோபால் குறித்து திருவள்ளுவர் சங்கத்தின் அரசு அவர்களும், ஒளவையார் குறித்து தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன் அவர்களும், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் குறித்து எம்.சி.மணி அவர்களைப்பற்றி நினைவுறுத்தும் நிகழ்வில் சிறப்புரை ஆற்றினர்.

இதில் கலந்து கொண் டு பேசிய திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் முனைவர் எஸ்.டி.குமார், பெங்களூரு திருவள்ளுவர் சங்கத்தை உருவாக்கி கட்டிக் காத்தவர் அ. ம. வேணுகோபால் அவர்கள். அவரை நினைவுருத்தும் இந்த நிகழ்வில் அவரது உறவினர்கள் கலந்து கொண்டிருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். நிகழாண்டு முழுவதும் சங்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

விரைவில் உலகளாவிய திருவள்ளுவர் மாநாடு, ஒரு முன்னணி கல்வி நிறுனத்துடன் இணைந்து நடைபெற உள்ளது. இதில் இந்தியாவிலிருந்து மட்டுமல்லாது உலகளவிலிருந்து முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அதில் திருவள்ளுவர், திருக்குறள் குறித்து ஆய்வுக் கட்டுரைகளும் சமர்பிக்கப்ப்ட உள்ளது. கர்நாடகத்தில் திருவள்ளுவர், திருக்குறல் தொடர்பான மாநாடுகள் நடைபெற்றுள்ளன. ஆனால் ஒரு மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்கப்பட உள்ளது இதுதான் முதல்முறை என்றார்.

பின்னர் புதிதாக திருவள்ளுவர் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு 2026 ஆண்டின் திருவள்ளுவர் சங்கத்தின் நாட்காட்டி வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்