கோவை, மே 28: இந்திய பேனாநண்பர் பேரவையின் 28ஆவது நட்பு சங்கம விழா பேரவைத் தலைவர் மா. கருண் தலைமையில் கோவை வின்டேஜ் கினாசிக் குளிர் அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவின் சிறப்பு மலரை எழுத்தாளர் கலைமாமணி ராஜேஷ்குமார் வெளியிட முதல் பிரதியை தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் சி. சுப்பிரமணியம் பெற்றுக் கொண்டார்.
மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெய ராமகிருஷ்ணன், விஜயா பதிப்பக பதிப்பகம் மு.வேலாயுதம், தமிழறிஞர் திருப்பூர் மணியம் ராமசாமி, கோவா தமிழ்ச் சங்கத் தலைவர் ர.பழனிச்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர்.
பொதுச்செயலாளர் ஜெ. ஜான் கென்னடி, பொருளாளர் கோ, செல்லதம்பி, அறங்காவலர்கள், புதுடில்லி ஆ. பிரமநாயகம், கன்னியாகுமரி தா.தேவதாஸ், சென்னை முத்து செல்வராஜா, மும்பை பா. மலர்விழி, துணைத் தலைவர்கள் முனைவர் சி.சிவ.பிரேம்பிரகாஷ், வே. சிதம்பரம், இணை செயலாளர் முனைவர் திருமதி.தா. ஜெனிலா நடராஜன், கோவை மண்டலப் பேரவைக் கிளை அமைப்பாளர் த. தர்மராஜ், விழா நெறியாளர் ந.முத்துமணி, பாவலர் கருமலைத்தமிழாழன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.































































