முகப்பு Politics கருநாடக திமுக சார்பில் முப்பெரும் விழா: மூத்த கழக நிர்வாகிகளுக்கு பாராட்டு

கருநாடக திமுக சார்பில் முப்பெரும் விழா: மூத்த கழக நிர்வாகிகளுக்கு பாராட்டு

137
0
oppo_1024

பெங்களூரு செப். 11: கர்நாடக மாநில திமுக சார்பில் முப்பெரும் விழாவும், மூத்த நிர்வாகிகளுக்கு பாராட்டு கூட்டமும் நடைபெறுகிறது.

இது தொடர்பாக கர்நாடக மாநிலத் திமுக அமைப்பாளர் ந.ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: கருநாடக மாநில திமுக சார்பில் செப். 15 ஆம் தேதி ஞயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கருநாடக மாநில திமுக தலைமை அலுவலகம், கலைஞரக வளாகம், தளபதி மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் விழா நடைபெறுகிறது. விழா துவக்கத்தில் முன்னாள் திமுக பொறுக்குழு உறுப்பனர் வி.எஸ்.மணி அவர்கள் திமுக இருவண்ணக் கொடியை ஏற்றிவைக்கிறார்.

முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் கே.எஸ்.சுந்தரேசன் தலைமையில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் திருவுருவச் சிலைகளுக்கு மாநில திமுக நிர்வாகிகள், கட்சியின் முன்னணியினர் மாலைகள் அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்துவார்கள் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மு.ராஜசேகர், எம்.முருகானந்தம் இனிப்பு வழங்குவார்கள். இதை தொடர்ந்து முன்னாள் பொறுப்பு குழு உறுப்பினர் ஏ.டி.ஆனந்தராஜ் அவர்கள் தலைமையில் நடைபெறும் முப்பெரும் விழாக் கூட்டத்தில் மாநில அமைப்பாளர் ந.ராமசாமி, கழக முன்னோடிகளை அறிமுகப்படுத்தி பாராட்டி வரவேற்புரை ஆற்றுகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் ஆர்.எஸ்.கிரி, மற்றும் மாநில திமுக நிர்வாகிகள், கட்சியின் முன்னணியினர் சிறப்புரை ஆற்றுகிறார்கள். மாநில திமுக மகளிரணி அமைப்பாளர் சற்குண இளமதி நன்றி கூறுகிறார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்