பெங்களூரு, ஜன. 25: உலகிலேயே மொழிக்காக போராட்டம் நடத்தியது திமுக கட்சிதான் என்று கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தெரிவித்தார்.
பெங்களூரு ராமசந்திரபுரத்தில் உள்ள திமுக அலுவலகம், கலைஞர் மு.கருணாநிதி வளாகம், மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் சனிக்கிழமை கர்நாடக மாநில திமுக சார்பில் மாநில அமைப்பாளர் ந.இராமசாமி தலைமையில் தாய் தமிழ் மொழிக்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளுக்காக வீர வணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் மொழிப்போர் தியாகிகள் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர் பேசிய ந.இராமசாமி, தமிழ் மொழிக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த திமுகவைச் சேர்ந்த 12 பேருக்கு மாநில திமுக சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. திமுக கட்சி சார்பில் முன்னெடுத்த போராட்டம் என்பது, உலகிலேயே மொழிக்காக தன்னுயிரை இழந்து வரலாறு படைத்த தியாகிகள் ஆவார்கள். உலகிலேயே மொழிக்காக போராட்டம் நடத்தியது திமுக கட்சிதான். காங்கிரஸ் ஆட்சியில் இந்தியை தமிழ்நாட்டிற்கு புகுத்த ராஜாஜி முயன்றார். அதனை எதிர்த்து திமுக சார்பில் மிகப் பெரும் போராட்டம் நடைபெற்றது.
இதனால் தமிழ்நாடு முழுவதும் ஸ்தம்பித்து போனது. இளைஞர்கள் வெகுண்டு எழுந்தார்கள். கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டன. மாணவர்கள் அத்தனை பேரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அந்த போராட்டத்தில் தியாகிகள் 12 பேரும் தங்களின் இன்னுயிரை ஈன்றனர். அவர்கள் இன்னுயிரை ஈன்றதை திமுக மட்டுதான் நினைத்து பார்த்து, ஆண்டுதோறும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி கொண்டிருக்கிறது. அந்த வகையில் நிகழாண்டும் மாநில திமுக சார்பில் எனது தலைமையில் மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செய்து, அவர்களின் தியாகிகை எண்ணி பெருமை படுகிறோம் என்றார்.
நிகழ்ச்சியில், மாநில திமுக முன்னால் நிர்வாகிகள் வி.எஸ்.மணி, ஏ.டி.ஆனந்தராஜ், கே.எஸ்.சுந்தரேசன், மாநில மகளிர் அணி அமைப்பாளர் சற்குணம், துணை அமைப்பாளர் மங்கம்மாள், தொமுச பேரவை தலைவர் மு.பொன்னம்பலம், செயலாளர்கள் எஸ் சிவசங்கரன், எஸ்.ஏழுமலை, கிளைக்கழக செயலாளர்கள் லோகநாதன், ஜி.நாகராஜ், பெமல் கேசவன், ஹரிஹர புத்திரன், ஆ.கரிகாலன், உத்திரகுமார், இளைஞர் அணி உறுப்பினர்கள், விஜய், மனோஜ், டி.இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.































































