கன்னியாகுமரி, ஜன. 19: இந்திய பேனா நண்பர் பேரவையின் சார்பில் மாணவருக்கு கல்வி கட்டண உதவி ரூ.9,600க்கான காசோலை வழங்கப்பட்டது.
இந்தியப் பேனாநண்பர் பேரவை, கன்னியாகுமரி மாவட்டக்கிளை நண்பர்கள் சந்திப்பு, நாகர்கோவில் ஆயர் இல்ல அரங்கில், பேரவைத் தலைவர் மா.கருண் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக மேனாள் வனத்துறை ஆய்வாளர் தா. சுடலைமுத்து பிள்ளை, பேரவைக்கிளை புரவலர் மருத்துவர் மா.நெடுஞ்செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்டப் பேரவைக்கிளை அமைப்பாளர் தா.தேவதாஸ் வரவேற்றார். நாகர்கோவில் கார்மல் பள்ளியில் பத்தாவது வகுப்பு படிக்கும் ஏழை மாணவன் ஆல்டிரினுக்கு பேரவை சார்பாக ஆண்டு கல்விக் கட்டணம் ரூ. 9,600 பள்ளியின் பெயரில் காசோலையாக மாணவனின் தாயாரிடம் வழங்கப்பட்டது.
பேரவை இணைச்செயலாளர் முனைவர் தா.ஜெனிலா நடராஜன் அவர்களின் தாயார், நினைவில் வாழும் தாணம்மாள் அவர்களின் பெயரில், குமரி மாவட்டத்தில், அரசுப் பள்ளியில், பத்தாவது வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவன், மாணவிக்குப் பேரவை சார்பாக ஆண்டு தோறும் ரூ. 5000/- கல்வி ஊக்கத்தொகை அறிவித்து, ஒப்புதல் பெற்றார். பத்மா சந்திரன் நன்றியுரையாற்ற, தேனீர் விருந்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.































































