பெங்களூரு/சென்னை: சென்னையின் சிறந்த வழக்கறிஞரும், அரசியல் விமர்சகருமான ஆதித்ய சிவகுமார், சுதந்திர இந்தியாவின் முதல் சட்டச் செயலாளராகவும், இந்தியாவின் இரண்டாவது தலைமைத் தேர்தல் ஆணையராகவும், இந்தியாவின் ஐந்தாவது சட்ட ஆணையத்திற்குத் தலைமை தாங்கியவரும், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவை மொழி அடிப்படையில் மாநிலங்களாகப் பிரிப்பதற்கு வழிகாட்டியாகப் பயன்படுத்தப்பட்ட வெள்ளை அறிக்கையின் தலைவருமாக, லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டனிடமிருந்து தனிப்பட்ட நன்றியையும் உயர் பாராட்டையும் பெற்றவரும், சமஸ்கிருத அறிஞராகவும் திகழ்ந்த, குதூர் வைத்தியநாதன் கல்யாண் சுந்தரம் என்ற கே.வி.கே. சுந்தரத்தின் பேரனாவார்.
ஆதித்ய சிவகுமார் கர்நாடகம், தமிழகம் தொடர்பான தனது கருத்துகளை கூறியதாவது: கர்நாடகத்தின் முதல்வராக டி.கே.சிவகுமார் ஜூன் 3 ஆம் தேதி பதவி ஏற்க உள்ள நிலையில், ஆதித்ய சிவகுமார் இவ்வாறு கருத்து தெரிவித்தார். மேலும் அவர்கள் இது குறித்து கூறுகையில், நான் ஆஸ்ரேவியாவில் இருந்தப்போது எனக்கு அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு, வழக்கறிருக்குப் படித்து, இப்போது மக்களுக்காக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன்.
என்றாலும், தமிழகம் மட்டுமின்றி, இந்திய அளவில் ஏற்படும் அரசியல் மாற்றங்களுக்காகவும், அரசியலில் முன்னெடுக்க வேண்டிய பணிகளுக்காகவும் எனது கருத்து மற்றும் ஆலோசனைகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறேன்.
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராகவும், தற்போது முதல்வராக பதவி ஏற்க உள்ள டி.கே.சிவகுமார் அக்கட்சியின் முக்கியத் தலைவராக மட்டுமின்றி, வெற்றி பெற்றத் தலைவராகவும் உள்ளார். அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த பதவியை அக்கட்சியின் தலைமை வழங்கி இருக்க வேண்டும்.

ஆனால் அவருக்கு முதல்வர் பதவி தாமதமாக வழங்கப்பட்டுள்ளது. தாமதமாக வழங்கப்பட்டாலும், காங்கிரஸின் இந்த முடிவை வரவேற்க வேண்டும். அவர் வரும் காலங்களில் கர்நாடக மக்களுக்கு சிறந்த திட்டங்களை வழங்கி, சிறப்பான ஆட்சியை வழங்குவார் என்று நம்புகிறேன்.
அதே போல் தமிழகத்தில் முதல்வராக சி.ஜோசப் விஜய் பதவி ஏற்றுள்ளார். மக்கள் சக்தியின் இந்த தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். அவரது புகழின் தொடர்ச்சியையும், மக்களிடம் அவருக்கு உள்ள ஆதரவையும் அடுத்து நடைபெற உள்ள இடைத்தேர்தலில் நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.
தமிழகம் ஐரோப்பாவில் உள்ள நார்வே,பெல்ஜியம் போன்று வளர்ச்சி அடைந்த நாடுகளைப் போல மக்கள் நலம் சார்ந்த மாநிலமாக திகழ்க்கிறது. எனவே இங்கு பொறுப்பேற்றுள்ள புதிய அரசு, ஊழலற்ற, மக்கள் நல ஆட்சியை தொடர்ந்து வழங்கினால், அடுத்த 5 ஆண்டுகள் எந்த பிரச்னையும் இல்லாமல் கடக்க முடியும்.
ஜூன் 12 ஆம் தேதி வர உள்ள மேக்கேதாட்டு விவகாரத்தில், டி.கே.சிவகுமார், சி.ஜோசப் விஜய் ஆகியோர் எந்த பிரச்னை இல்லாமல் இருமாநில விவசாயிகள், மக்கள் நலம் சார்ந்த நல்ல முடிவை எடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்றார். எதிர்காலத்தில் ஊடகங்களில் நடைபெறும் அரசியல் சார்ந்த விவாதங்களில் கலந்து கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
































































