பெங்களூரு, ஜன. 22: கர்நாடக மாநில திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் நாள் ஜன. 25 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
தாய்மொழி காக்க தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மொழி போர் தியாகிகள் நாள் ஜன. 25 ஆம் தேதி காலை 10 மணி அளவில் ராமச்சந்திரபுரத்தில் உள்ள கர்நாடக மாநில திமுக அலுவலகம், கலைஞர் வளாகத்தில் உள்ள தளபதி மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் நடைபெறுகிறது.
அன்று மொழிப்போர் தியாகிகள் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. இதில் கர்நாடக மாநில திமுக நிர்வாகிகள், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள், இளைஞரணி, மகளிரணி, தொமுச பேரவை நிர்வாகிகள், தொண்டர்கள் வீரவணக்கம் செலுத்துவார்கள்.
அதே நாளில் கோலார் தங்கவயலில் இந்த நிகழ்ச்சி வழக்கறிஞர் மணிவண்ணன் தலைமையில் நடைபெறுகிறது. இதில் தங்கவயல் திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் இந்த நிகழ்வில் திமுக கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கர்நாடக மாநில திமுக மாநில அமைப்பாளர் ந. ராமசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.































































