முகப்பு Bengaluru கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா

கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா

92
0

பெங்களூரு, ஜன. 19: பெங்களூரில் சனிக்கிழமை கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் பொங்கல் விழா, கல்விப் பணியில் 50 ஆண்டுகள் சேவை செய்த அ.தனஞ்செயன் அவர்களுக்கு பொன்விழா, ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கும் அரசு தேர்வில் முதன்மை பெற்ற மாணவர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது

பெங்களூரு குயின் சாலையில் உள்ள விவசாயத் தொழில்நுட்ப வல்லுனர்கள் கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக சக்தி அக்குமலேட்டர் நிறுவனத்தின் இயக்குனர் ஆர்.கந்தசாமி, செய்தியாளர் க.தினகரவேலு,மங்களூர் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் செந்தில் கிருஷ்ணமூர்த்தி, பெங்களூரு வடக்கு பிஆர்சி நிங்கராஜ், பெங்களூரு அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் சித்தப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு கருநாடக தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் கௌரவ தலைவர் லட்சுமிபதி தலைமை வகித்தார். முன்னிலையை துணைச் செயலாளர் மெர்லின், துணைத் தலைவர்கள் பேராசிரியர் க.சுப்ரமணியன், ஜி.சம்பத் ஆகியோர் வகித்தனர். முன்னதாக வரவேற்புரையை சங்கத்தின் பொருளாளர் சுசீதாவும், ஏற்புரையை செயற்குழு உறுப்பினர் நாகசுந்தரி, தமிழ் அறக்கட்டளையைச் சேர்ந்த ஜுவேரியா ஆற்றினர். நோக்கவுரையை துணைத் தலைவர் புலவர் கார்த்தியாயினி, நன்றியுரையை செயற்குழு உறுப்பினர் ஜோதி ஆகியோர் ஆற்றினர். நிகழ்ச்சிகான ஏற்பாட்டை சங்கத்தின் செயலாளர் முனைவர் இரா. பிரபாகரன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்