பெங்களூரு, டிச. 20: பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன்-கீதா தம்பதியின் அமுதவிழாவில் திரளானவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
பெங்களூரு சிவன்செட்டி கார்டன் ஆஸ்பார்ன்சாலையில் உள்ள முதலியார் சங்கத்தில் வியாழக்கிழமை (டிச. 19) தி.கோ.தாமோதரனின் 80 வது பிறந்தநாள் விழா, தி.கோ.தாமோதரன்-கீதா தம்பதியின் 50 வது திருமணநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் அவர்களது உறவினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் மட்டுமின்றி, அனைத்து மொழியைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்து விழாவை சிறப்பித்தனர்.
விழாவில் அம்பேத்கர் வளர்ச்சிக்கழத்தின் தலைவர் சம்பத்ராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர் சரவணன், ரகுதேவராஜ், கர்நாடக மாநிலத்தின் திமுக அமைப்பாளர் ந.இராமசாமி, பொருளாளர் தட்சிணாமூத்தி, தி.க மாநிலத் தலைவர் ஜானகிராமன், முல்லைக்கோ, கஜபதி, புஷ்பலட்சுமி, தமிழ்ச்சங்கத்தின் தலைவர் கோ.தாமோதரன், செயலாளர் சம்பத், கோபிநாத், அமுதபாண்டியன், ராமசுப்ரமண்யன், பாரி,
முன்னாள் செயலாளர் வா.ஸ்ரீதரன், ராமசந்திரன், கோ.கருணாநிதி உள்ளிட்ட முன்னாள், இன்னாள் நிர்வாகிகள், தாய்மொழிக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார், விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் பையப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ், உரிமைக்குரல் எம்ஜிஆர் ரவி, காங்கிரஸ் பிரமுகர்கள் விஸ்வநாதன், ராஜேந்திரன், ராஜசேகரன், கோபி, கர்நாடக பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் ந.முத்துமணி, நிர்வாகிகள் மதியழகன், தினகரவேலு, வெங்கடேஷ் உள்பட பலரும் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பின்னர் தாம்பூலம், அருசுவை உணவு வழங்கப்பட்டது.



























































