பெங்களூரு, டிச. 1: இந்தியாவின் பாரம்பரியமிக்க எழில்மிகு நகரமான பெங்களூரில் மல்லேஸ்வரம் 18-ஆவது கிராஸ்-இல் இயங்கிவரும் ஃபர்பெக்ட் ப்ர்ல்ஸ்-ஆர்த்தோடான்டிக் இம்பிலாண்ட் மையம் (Perfect Pearts: Orthodontic Implant Center) தனது எட்டாவது ஆண்டுவிழாவை ஞாயிற்றுக்கிழமை (1.12.2024) கொண்டாடியது. நம்பிக்கையான புன்னகையை உருவாக்கி, சுகமான அனுபவங்களை வழங்கி எட்டாவது ஆண்டுவிழாவை கொண்டாடுவதில் பெருமிதம் கொள்கிறோம். நா.காளிதாசம்மாள் அவர்களின் தொலைநோக்கு மற்றும் ஆளுமைமிக்க நிர்வாகத்தின் கீழ் இந்த மருத்துவமனை வெற்றிகரமாக இயங்கிவருகிறது.

நீட் தேர்வில் நேர்ச்சி பெற்று பெங்களூரு ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் (Rajiv Gandhi University of Health Sciences)-இன் இணைப்புப் பெற்ற வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இளங்கலை பல் அறுவை சிகிச்சை நிபுணர் (BDS) பயின்ற டாக்டர் எஸ்.காவேரி மற்றும் டாக்டர் எஸ்.பவானி ஆகிய இரண்டு அனுபவமிக்க, கைத் தேர்ந்த மருத்துவர்கள் நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்து வருகின்றனர். இவர்கள் பொது அறுவை சிகிச்சையில் பல்கலைக்கழக அளவில் முன் தரவரிசை பெற்றவர்கள். சிக்கபள்ளாபூரில் நடைபெற்ற கோவிட்-19 கால உலக கின்னஸ் சாதனை மெகா மருத்துவ முகாமில் கலந்துகொண்டு மருத்துவச் சேவையாற்றியவர்கள். அதற்காகக் கர்நாடக மருத்துவ சங்கம் மற்றும் கர்நாடக அரசின் ‘சிறந்த மருத்துவர்’ என்ற பாராட்டுச் சான்றிதழைப் பெற்றவர்கள். மருத்துவ அழகுசாதனவியல் பட்டமும், சிறப்புப் பயிற்சியும் பெற்றவர்கள்.

பல் மருத்துவம் மற்றும் மருத்துவ அழகுசாதனவியல் சிகிச்சை பெறுவதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் இந்த மருத்துவமனையில் உள்ளன. நோயாளிகளை இன்முகத்தோடு கவளித்து உபசரிக்கும் உதவியாளர்கள் உள்ளனர். பெங்களூரின் எந்தப் பகுதியிலிருந்தும் இந்த மருத்துவமனைக்கு மனிதில் வந்து செல்ல வாறியாகப் பேருந்து வசதி உள்ளது. மல்லேஸ்வரம் 18-ஆவது கிராஸ் பேருந்து முனையத்திற்கு எதிரிலேயே இந்த மருத்துவனை அமைந்துள்ளமை இதன் சிறப்பாகும். மல்லேஸ்வரம் பகுதியில் பல்மருத்துவத்திற்கு இந்த மருத்துவமணை நல்ல பெயர் பெற்றதாகும். வாடிக்கையாளர்கள் இந்த மருத்துவமனையை நாடிவருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் வசதி கருதி, பற்களை சுத்தம் செய்தல், வெண்மையாக்குதல், புன்னகை வடிவமைத்தல், டென்டல் பில்லிங், விஸ்டம் டீத் எக்டாக்டிங்,டென்டல் க்ரௌவுன் & பிரிட்ஜ், ரூட் கெனால் சிகிச்சை, பிரேஸ் சிகிச்சை, சீரமைப்பு சிகிச்சை, ஈறு சிகிச்சை, அழகுசாதனப் பல் சிகிச்சை (Teeth Cleaning & Whitening, Smile Designing, Dental Filling, Wisdom Teeth Extracting, Dental Crowns & Bridge, Root Canal Treatment, Braces Treatment, Aligners Treatment, Gum Treatment, Cosmetic Dental Treatment) ஆகிய சிறப்புப் பிரிவுகளில் இங்கு சிறந்த மருத்துவச் சிகிச்சை தரப்படுகிறது. இந்த மருத்துவமனையின் எட்டாவது ஆண்டுவிழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கு 50 சதமும், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் 30 சதமும், மூத்த குடிமக்களுக்கு 20 சதமும் மற்றும் பெருநிறுவனங்களுக்கு 20 சதம் சிறப்புத் தன்ளுபடி வழங்கப்படுகிறது.

மேம்பட்ட தொழில்நுட்பம், நிபுணர் கவனிப்பு மற்றும் நோயாளியின் பல் ஆரோக்கியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட, பல் மற்றும் அழகியல் சிகிச்சைகளுக்கு நாங்கள் உங்கள் நம்பிக்கையான மருத்துவர்கள். நோயாளிகளுக்கு ஆறுதலான மற்றும் வரவேற்கத்தக்க சூழலை வழங்கும் மேம்பட்ட பல் சிகிச்சைகளுக்கு நாங்கள் நிபுணத்துவம் பெற்றவர்கள். எங்கள் தனிப்பயனாக்கப்பட்ட நோயானிப் பராமரிப்பு, அவர்களுக்கு ஆறுதலான அனுபவத்தை அளிக்கிறது. நோய்ரளிகளுடன் தமிழ், கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி அவர்களின் ஒவ்வொரு பிரச்சினைகளையும் நாங்கள் நிவர்த்தி செய்கிறோம்.
எங்கள் மருத்துவமனையில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக, மேம்படுத்தப்பட்ட வலியில்லாக் கையடக்க எக்ஸ்ரே கருவி பயன்படுத்தப்படுகிறது. நோயாளிகளை, நவீன வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட கான்பிடிடென்ட் சாமுண்டி டென்டல் (Confident Chamundi Dental) இருக்கைகளில் அமரவைத்து சிகிச்சை தருகிறோம். ஆட்டோகிளேவ் மற்றும் புற ஊதா ஸ்டேர்லைசேஷன் மூலம் உயர் சுகாதாரத் தரங்களுக்கு முன்னோடியாக எங்கள் மருத்துவமனை விளங்குகிறது. எங்கள் ஒவ்வொரு கருவியும் ஆறு அடுக்குக் கிருமி நீக்கம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. நோயாளிகளின் பாதுகாப்பிற்காகப் புற அறையில் பல் சிகிச்சைக்கான எங்கள் பிரத்யேகச் சலுகைகளுடன் இந்த ஆண்டுவிழா சீசனில் பிரகாசமாகப் புன்னகையுங்கள்.

பெங்களூர்வாசிகள் நம்பிக்கையான எங்கள் மருத்துவமனையை அணுகிப் பயன்பெறலாம். உங்களுக்குச் சேவையாற்ற நாங்கள் காத்திருக்கிறோம். உங்கள் ஆதாரவையும், ஒத்துழைப்பையும் என்றும் எதிர்நோக்கியிருக்கிறோம்.
(தொடர்புக்கு: 080-23448055, +91-8050655480)
8-வது ஆண்டு விழாவின் நிமித்தம் முன்னாள் வாடிக்கையாளர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் திரளாக வந்திருந்து விழாவைச் சிறப்பித்தனர். எங்கள் நீண்டகாலக் குடும்ப நண்பரும் டெல்லிப் பல்கலைக்கழக முன்னாள் இணைப் பதிவாளருமான பி.ராஜராஜன் டெல்லியிலிருந்து வந்து இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றது சிறப்புச் செய்தியாகும்.

வந்திருந்த விருந்தினர்களுக்குத் தேனீருடன் சிற்றுண்டியும் வழங்கப்பட்டது. பத்திரிகையாளர் உட்பட கலந்துகொண்ட அனைவருக்கும் மருத்துவமனையின் உரிமையாளர் காளிதாசம்மாள் நன்றி தெரிவித்தார். இந்த மருத்துவமனையின் உருவாக்கத்திற்கு அடித்தளமிட்ட டாக்டர் கஷ்யப் மற்றும் டாக்டர் ஃபிளிஸ்செட் கஷ்யப் (USA) ஆகியோருக்கும் எங்கள் நண்பர் திருமதி மஞ்சுளா குடும்பத்தினருக்கும் சிறப்பான நன்றியும், நினைவு கூர்தலும் தெரிவிக்கப்பட்டது. அனைவரது ஆசீர்வாதங்களுடன் ஆண்டுவிழா இனிதே நிறைவு பெற்றது.
































































