முகப்பு Education ராமையா இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டின் (ஆர்ஐஎம்) 28வது ஆண்டு பட்டமளிப்பு விழா

ராமையா இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டின் (ஆர்ஐஎம்) 28வது ஆண்டு பட்டமளிப்பு விழா

144
0

பெங்களூரு, செப். 25: ராமையா இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டின் 28வது ஆண்டு பட்டமளிப்பு விழா புதன்கிழமை (செப்.25) நடைபெற்றது. இதில் வணிக மேலாண்மையில் முதுகலை பட்டதாரி மாணவர்கள் பதக்கம், பட்டங்களை பெற்றனர்.

இதில் கலந்து கொண்டு பேசிய கேஓஓ இணை நிறுவனர், சிஇஓ அப்ரமேய ராதாகிருஷ்ணா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளித்து சிறப்புரை ஆற்றினார்.உரையில், படித்து பெற்ற எல்லோருக்கும் வேலை கிடைப்பதில்லை. இதனால் பட்டம் பெற்ற பலரும் சுயமாக தொழில் தொடங்குகின்றனர். எந்த தொழிலும், நிறுவனமும் தொடங்கிய உடன் பெற்ற பெறாது. அது வெற்றி பெரும் வரை நாம் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும். தோல்விகள் பல ஏற்பட்டாலும் அதனை வெற்றியின் படிக்கட்டுகளாக நினைத்துக் கொள்ள வேண்டும்.

உலகம் அறிவாளிகளை ஏற்றுக் கொள்ள பசியோடு உள்ளது. மக்களுக்கு தேவையானவற்றை நாம் சிறப்பாக வழங்கி விட்டாள் அவர்கள் நம்மையும், நமது தொழிலையும் சிவப்பு கம்பளம் விரித்து, அன்போடு ஏற்றுக் கொள்வார்கள். சர்வதேச அளவில் படித்த இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதனை உரிய வகையில் பட்டம் பெற்ற மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு, நீங்கள் படித்த கல்வி நிறுவனத்திற்கும், பெற்றோர்களுக்கும், நாட்டிற்கும் நற்பெயரை பெற்று தர வேண்டும் என்றார்.

பட்டமளிப்பு விழாவில், ராமையா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் இயக்குநரும், கோகுல கல்வி அறக்கட்டளையின் அறங்காவலருமான எம்.ஆர்.ஆனந்தராம் தலைமை தாங்குகினார். கோகுல கல்வி அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி டாக்டர் பார்ஸ்வநாத் எச் வி, பொறியியல் மற்றும் பொது அறிவியல் மற்றும் கோகுல கல்வி அறக்கட்டளையின் தலைமை கல்வி ஆலோசகர் டாக்டர் கரிசித்தப்பா, ஆகியோர் கெளரவ விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

ராமையா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட மேலாண்மை நிறுவனமாக இருக்க விரும்புகிறது. இந்த நிறுவனம் ஏஐசிடிஇயால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் என்பிஏவால் அங்கீகரிக்கப்பட்ட பிஜிடிஎம் திட்டம், பிஜிடிஎம்-ஐஇவி இன்னோவேஷன் தொழில்முனைவு & துணிகர மேம்பாடு-இரண்டு வருட ஏஐசிடிஇயால் அங்கீகரிக்கப்பட்ட பாடநெறியை அடுத்த தலைமுறை தொழில்முனைவோரை உருவாக்குவதற்கும் மாற்றுவதற்கும் இரண்டு வருட முழுநேர முழுநேர வழங்குகிறது.

விளையாட்டு நிர்வாகத்தில் பிஜிபி, சமீபத்திய விளையாட்டு மேலாண்மை உத்திகள் பற்றிய ஆழமான புரிதலை மாணவர்களுக்கு வழங்குவதற்கும் விளையாட்டு நிறுவனங்களின் தொழில்முறை நிர்வாகத்திற்குத் தேவையான திறன்களை வளர்ப்பதற்கும் ஒரு வருட திட்டம், பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கான பிஜிபி, 11 மாதத் திட்டம், இது பணிபுரியும் வல்லுநர்களுக்கு அவர்களின் நிர்வாக மற்றும் செயல்பாட்டுத் திறன்களில் சிறந்து விளங்க உதவுகிறது மற்றும் நிதிப் பகுப்பாய்வுகளில் பிஜிபி, நிதிப் பகுப்பாய்வை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும். என்எஸ்இ அகாடமி லிமிடெட் உடன் இணைந்து 11 மாதத் திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்