முகப்பு Bengaluru பெங்களூர் செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தில் ஏழாவது உலக திருக்குறள் மாநாட்டின் இலச்சினை வெளியீடு

பெங்களூர் செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தில் ஏழாவது உலக திருக்குறள் மாநாட்டின் இலச்சினை வெளியீடு

பல்கலைக்கழக துணைவேந்தர் விக்டர் லோபோ எஸ்ஜே வெளியிட எஸ்டி குமார் பெற்றுக்கொண்டார்

39
0

பெங்களூர், ஜூன் 30: பெங்களூர் செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தில் ஏழாவது உலக திருக்குறள் மாநாட்டின் இலட்சினை வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் எஸ்டி குமார் பேசும்போது செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகம் பெங்களூர் திருவள்ளுவர் சங்கம் தாய்மொழி கூட்டமைப்பு இணைந்து வருகின்ற ஜூலை மாதம் 5-ந் தேதி செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தில் ஏழாவது உலக திருக்குறள் மாநாட்டை நடத்துகிறது.

இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் மற்றும் கர்நாடகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொள்கிறார்கள். தொடக்க விழாவில் தமிழக அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் கே தென்னரசு இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

மேலும் சிறப்பு அழைப்பாளராக கர்நாடக ரக்ஷன வேதிகே தலைவர் நாராயண கவுடா கலந்து கொண்டு கன்னட திருக்குறள் நூலை வெளியிடுகிறார். அதனைத் தொடர்ந்து மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் நூலை எஸ். டி. குமார் வெளியிடுகிறார்.

முதல் நூலை மயில்சாமி அண்ணாதுரை பெற்றுக் கொள்கிறார். மேலும் சேர சோழ பாண்டியர் அரங்கத்தில் 60-க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை பேராசிரியர்கள் சமர்ப்பிக்கின்றனர் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகம் கண்ணாடி பேழையில் பொது மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படுகிறது.

நிகழ்ச்சியில் டீன்கள் அருள்மணி, கிறிஸ்டோ வி செல்வம், பேராசிரியர் சரளா ஆறுமுகம்,முனைவர் மெய் சித்ரா, பெங்களூர் திருவள்ளுவர் சங்க செயலாளர் பிரபாகர், தாய்மொழி கூட்டமைப்பு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில் கலந்து கொள்ளும் பேராசிரியர்கள் தமிழறிஞர்கள் கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் உள்ள தமிழ் சங்கங்களுக்கு சிறப்பு செய்யப்படுகிறது என்றார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்