முகப்பு Bengaluru கர்நாடக திமுக இலக்கிய அணி சார்பில் துர்கா ஸ்டாலின் நூல் அறிமுக விழா

கர்நாடக திமுக இலக்கிய அணி சார்பில் துர்கா ஸ்டாலின் நூல் அறிமுக விழா

87
0

பெங்களூர், நவ. 8: கர்நாடக மாநில திமுக இலக்கிய அணி சார்பில், தமிழக முதல்வ‌ர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மனைவி எழுதிய ‘அவரும் நானும்’ என்ற நூல் அறிமுக விழா பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை (நவ.9) நடைபெறுகிறது.

பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள இந்திய வேளாண்மை கழகம் அரங்கத்தில் இந்த விழா 9ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. கர்நாடகத் தமிழ் பத்திரிக்கையாளர் சங்கத்தின் தலைவர் முத்துமணி நன்னன் வரவேற்புரை ஆற்றுகிறார். கர்நாடக மாநில திமுக இலக்கிய அணி செயலாளர் போர் முரசு கதிரவன் தலைமை தாங்குகிறார். கர்நாடக மாநில திமுக நிர்வாகிகள், இலக்கிய, மகளிர், இளைஞரணி, தொமுச நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர்.

டாக்டர் ஜெய ராஜமூர்த்தி நூல் அறிமுகம் செய்து வாழ்த்துரை வழங்குகிறார். தலைமை இலக்கிய அணி பொருளாளர் நாகை சந்திரபாபு, இயக்கத்தின் இலட்சியத்தை முழங்கும் பாரதி ஆர் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். விழா மேடையில் சிறப்பு நூலை பெறுபவர்கள் லிட்டில் பிளவர் பள்ளியின் தலைவர் மதுசூதனபாபு, வி ஸ்கொயர் வணிக வளாகத்தின் உரிமையாளர் தொழிலதிபர் செங்கம் வ.முருகன், கேஎஸ்ஆர்டிசி ஹரி கிருஷ்ணன், திருப்பத்தூர் மாவட்டம்,

செங்கம் சிகரம் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் இலக்கியா, திருப்பத்தூர் மாவட்ட ஆவின் பெருந்தலைவர் எஸ் ராஜேந்திரன், கர்நாடக மாநிலத் திமுக பொதுக்குழு உறுப்பினர் எஸ் பிரான்சிஸ்,திரைப்படத் தயாரிப்பாளர்,ஷமீன் சுலைமான், கிருஷ்ணகிரி மாவட்டம் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் துணைச் செயலாளர் கிரி ஆகியோர் நூல்களை பெற்றுக் கொள்கின்றனர். தங்க தங்கவயல் கரிகாலன் நன்றி கூறுகிறார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிற்பகல் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்விற்கான ஏற்பாடுகளை கர்நாடக மாநில திமுக இலக்கிய அணி செயலாளர் போர் முரசு கதிரவன் செய்து வருகிறார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்