முகப்பு Bengaluru பெங்களூரில் திருவள்ளுவர் சிலை வைக்க காரணமானவர்களுக்கு நன்றி: டாக்டர் பைப்பனஹள்ளி டி.ரமேஷ்

பெங்களூரில் திருவள்ளுவர் சிலை வைக்க காரணமானவர்களுக்கு நன்றி: டாக்டர் பைப்பனஹள்ளி டி.ரமேஷ்

101
0

பெங்களூரு, ஆக. 10: பெங்களூரில் திருவள்ளுவர் சிலை வைக்க காரணமானவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று டாக்டர் பைப்பனஹள்ளி டி.ரமேஷ் தெரிவித்தார்.


பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையில் திருவள்ளுவர் சிலை திற‌க்கப்பட்ட தினம் சனிக்கிழமை (ஆக. 9) விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பைப்பனஹள்ளி டி.ரமேஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது.

இதில் பெங்களூரு திருவள்ளுவர் சங்கத்தின் தலைவரும், தாய்மொழிக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் எஸ்.டி.குமார்,தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர்களான‌ இராசு.மாறன், தி.கோ.தாமோதரன், முன்னாள் செயலாளர் வா.ஸ்ரீதரன், கோபிநாத், மாநில திமுக பொருளாளர் தக்ஷ்ணாமூர்த்தி, செந்தில்நாதன், காங்கிரஸ் பிரமுகர் சரவணன், கோபி, கபிலன்,

தன்னுரிமை மனமகிழ் மன்றத்தின் நிர்வாகி ராஜசேகரன், குணசேகரன், பெங்களூரு திருவள்ளுவர் சங்கத்தின் செயலாளர் பிரபாகரன், நிர்வாகிகள் முனுசாமி, சந்திரமௌலி, கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பன்முகன், ஐடிஐ தமிழ் மன்றத்தைச் சேர்ந்த மாசிலாமணி உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர் டி.ரமேஷ் பேசியது: பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு, 16 ஆண்டுகள் ஆகியுள்ளது. பல ஆண்டுகள் மூடிக்கிடந்த இந்த சிலையை திறக்க பல தலைவர்கள் பாடுபட்டுள்ளனர். அவர்களை இந்த நேரத்தில் நினைத்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கர்நாடகத்தில் தமிழர்களுக்கு அடையாளத்தைக் கொண்டு வந்தவர்கள் அவர்கள் என்பதனை நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன். அவர்கள் நாம் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள்.

திருவள்ளுவர் சிலை திறப்பு தினத்தை பெங்களூரில் உள்ள அனைத்து தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும், அமைப்புகளும் ஒன்று திரண்டு வந்து கொண்டாடி, சிறப்பு செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல் வரும் ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படும் திருவள்ளுவர் தினத்திலும் தமிழர்கள் அனைவரும் இதை விடப் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்