முகப்பு Bengaluru தாயின் கனவை நிறைவேற்றும் மகன் – ரூ.400 கோடியில் ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் கே.ஜி.எப்....

தாயின் கனவை நிறைவேற்றும் மகன் – ரூ.400 கோடியில் ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் கே.ஜி.எப். பாபு

156
0

பெங்களூரு, ஆக. 9: பிரபல தொழில் அதிபரும், மனிதநேய மாமனிதருமான கே.ஜி.எப். பாபு தனது தாயின் கனவை நிறைவேற்றும் வகையில் ரூ.400 கோடி செலவில் 10,000 ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக வீடுகள் கட்டி கொடுக்கிறார். கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் மையப் பகுதியில் செயல்பட்டு வரும் அப்னான் கட்டுமான நிறுவன தலைவர் கே.ஜி.எப். பாபு, சிக்கப்பேட்டை தொகுதியில் 10,000 ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாக வீடு வழங்கும் ஒரு பெரிய தொண்டு திட்டத்திற்கு தனது தனிப்பட்ட சம்பாத்தியத்திலிருந்து ரூ.400 கோடி பெரிய தொகையை வழங்கி உள்ளார்.

இவரது இந்த திட்டம் வெறும் வீட்டு வசதித் திட்டம் மட்டுமல்ல, மாறாக ஒரு மகன் தனது மறைந்த தாயின் கனவுக்கு ஒரு மகத்தான அஞ்சலி செலுத்தும் மனிதநேயத்தின் வெளிப்பாடு ஆகும். “கடினமாக உழைத்து சம்பாதித்த பணம் ஏழைகளுக்கு சேவை செய்ய பயன்படும் போது தான் அதன் உண்மையான மதிப்பையும் அர்த்தத்தையும் வெளிப்படுத்துகிறது. என்று உறுதியாக நம்பும் கே.ஜி.எஃப் பாபு, இந்த சமூக சேவைத் திட்டத்தின் பின்னணியில் உள்ள உத்வேகம் தனது தாயார் என்று கூறுகிறார்.

ஏழைகளுக்கு வீடு கட்டுவது அவரது தாயின் மிகப்பெரிய கனவாக இருந்தது. அந்தக் கனவை நனவாக்க வேண்டும் என்ற உண்மையான உறுதியுடன் இந்த சேவையை மேற்கொண்டு உள்ளார். இதில் அரசியல் ஆதாய விருப்பம் எதுவும் இல்லாமல் முழுமையான சமூக அக்கறையுடன், அவர் இந்த மாபெரும் வரலாற்று சிறப்புமிக்க மனிதநேய பணியில் இறங்கியுள்ளார்.

வெளிப்படைத்தன்மை என்பது பொது சேவையின் அடித்தளம் ஆகும். இந்த மிகப்பெரிய மனிதநேய திட்டத்தில் வெளிப்படைத்தன்மைக்கு முதன்மையான முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தனது சட்டப்பூர்வ, வரி செலுத்தப்பட்ட தனிப்பட்ட வருமானத்திலிருந்து ரூ.400 கோடி மதிப்பிலான திட்டத்தின் முழு செலவையும் தான் ஏற்றுக்கொள்வதாக கே.ஜி.எஃப் பாபு தெளிவுபடுத்தியுள்ளார். அவர் சொன்னதை உண்மையாக்கி, வருமான வரித் துறைத் தலைவருக்கு தானாக முன்வந்து ஒரு கடிதம் எழுதி, இந்தப் பொது சேவைச் செலவு குறித்துத் தெரிவித்து உள்ளார், இது அவரது நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு சான்றாகும்.

ஏழைகளின் சொந்த வீடு கனவை நினைவாக்கும் அர்த்தமுள்ள இந்த பொது சேவைக்கு அரசாங்க ஒத்துழைப்பும் ஆதரவும் மிக மிக அவசியம் ஆகும். எனவே, பொருத்தமான இடத்தை அடையாளம் காண்பது முதல் வீடுகளுக்கு நீர் மற்றும் மின்சார இணைப்புகளை வழங்குவது வரை பல்வேறு அரசுத் துறைகளிடமிருந்து முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அவர் அதிகாரப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். கே ஜி.எஃப்.பாபுவின் இந்த முன்னோடி இல்லாத முயற்சி என்பது பணம் கொடுத்துவிட்டு அப்படியே ஒதுங்கி விடுவது அல்ல…! மாறாக திட்டம் முழுமையாக வெற்றி பெறுவதையும் தகுதியான பயனாளிகளைச் சென்றடைவதையும் உறுதி செய்வதற்காக அவரது உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.


கர்நாடக அரசால் இந்த அற்புதமான திட்டம் அங்கீகரிக்கப்பட்டால் பெங்களூரு வரலாற்றில் ஒரு தனிநபர் மேற்கொள்ளும் மிகப்பெரிய வீட்டுவசதி தானத் திட்டமாக இது இருக்கும். கே.ஜி.எஃப் பாபுவின் இந்த தன்னலமற்ற சேவை ஆயிரக்கணக்கான ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கையை ஒளிரச் செய்வது மட்டுமல்லாமல், சமூகத்தில் உள்ள மற்றவர்களையும் இது இதுபோன்ற நல உதவி சேவைகளை ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்