பெங்களூரு, ஆக. 1: மேலாண்மை அறங்காவலர் ஆர்.ஜே. ரத்னாகர், அறங்காவலர்கள் நீதிபதி வி. ராமசுப்பிரமணியன், ரியுகோ ஹிரா, எஸ்.எஸ். நாகானந்த் மற்றும் இந்தியாவின் அகில இந்திய ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்புகளின் தலைவர் நிமிஷ் பாண்டியா ஆகியோருடன் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டியும் மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தனர்.
30 நிமிட உரையாடலின் போது, மாண்புமிகு பிரதமர், பகவானுடன் கழித்த மறக்கமுடியாத தருணங்களை நினைவு கூர்ந்தார். நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக திட்டமிடப்பட்டுள்ள செயல்பாடுகள் குறித்து மாண்புமிகு பிரதமரிடம் அறங்காவலர்கள் விரிவாக விளக்கினர் மற்றும் மாண்புமிகு பிரதமருக்கு பிரசாந்தி நிலையத்திற்கு வருகை புரியுமாறு அன்பான அழைப்பை விடுத்தனர்.
பிரசாந்தி நிலையத்திற்கு வந்து பகவான் ஸ்ரீ சத்தியசாய்பாபாவின் ஆசிகளைப் பெறவும், நூற்றாண்டு விழாவில் பங்கேற்க விரும்புவதாகவும் பிரதமர் நரேந்திரமோடி அவர்களிடம் உறுதியளித்தார்.
,































































