முகப்பு Bengaluru மனிதனின் வளர்ச்சி‍ சமூகத்தை மாற்றியமைக்கும் ஆயுதம் புத்தகம்: தமிழறிஞர் தமிழ் இயலன்

மனிதனின் வளர்ச்சி‍ சமூகத்தை மாற்றியமைக்கும் ஆயுதம் புத்தகம்: தமிழறிஞர் தமிழ் இயலன்

144
0

பெங்களூரு, ஜூலை 28: மனிதனின் வளர்ச்சிக்கும், சமூகத்தின் மாற்றத்திற்கும் புத்தகங்கள் மட்டுமே ஆயுதமாக உள்ளதாக தமிழறிஞர் தமிழ் இயலன் கூறினார்.

கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் தமிழறிஞர் தமிழ் இயலன் எழுதிய ‘ஐம்பெரும் ஆற்றல்கள்’ நூல் வெளியீட்டுவிழா ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு இன்ஸ்டிடுயூஷன் ஆஃப் அக்ரிகல்சுரல் டெக்னாலஜிஸ்ட்ஸ், முதல்தளம், 15, குயின்ஸ் சாலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பேரா.வெ.தமிழ்ச்செல்வன் தலைமை. ஐம்பெரும் ஆற்றல்கள் நூலை பெங்களூரு தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன் வெளியிட, முனைவர் தேவி இராஜேஷ் நூலை பெற்று கொண்டார். நகைச்சுவை நாவேந்தர் குடியாத்தம் குமணன், கவிஞர் ஞால.இரவிச்சந்திரன், கே.ஜி.ராஜேந்திரபாபு, காங்கிரஸ் கட்சியின் மாநில மனித உரிமை செயலாளர் யுனிஸ் ஜோன்ஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இறுதியாக நூலாசிரியர் கவிஞர் தமிழ் இயலன் ஏற்புரை வழங்கி பேசும்போது, தமிழும் அறிவியலையம் இணைத்து ஐம்பெரும் ஆற்றல்கள் நூல் உருவாக்கினேன். மாதம் ஒரு நூல் வெளியிட வேண்டும் என்ற லட்சியத்தில், ஒவ்வொரு மாதமும் ஆய்வில் நூல்கள் வெளியிட்டுள்ளேன். கடந்த 18 மாதங்களில் 24 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழுக்கும் தமிழ் சமூகத்திற்கும் செய்யும் சேவையாக உள்ளது.

நாட்டில் பெரிய பெரிய மோதைகள், சிந்னையாளர்கள், ஆட்சி நிர்வாகம் நடத்தியவர்கள், பொருளாதார மேதைகள் என யாரை எடுத்து கொண்டாலும் அதிகமாக புத்தகங்கள் வசித்தவர்களாக இருப்பார்கள். பலர் நூலகங்களில் தங்களின் வாழ்நாளில் பெரும் பகுதியை செலவிட்டுள்ளவர்களாக இருப்பார்கள். ஏனெனில் புத்தகங்கள் சமூகத்தை மாற்றியமைக்கும் ஆயுதங்களாக உள்ளது என்றார்.

நூல் வெளியிட்டு விழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த‌ முன்னாள் சட்டபேரவை உறுப்பினர் கொ.வீ.நன்னன், பேராசிரியர் எஸ்.சிவலிங்கம், கர்நாடக தமிழ் மக்கள் இயக்க தலைவர் அரசு, செயலாளர் சரவணன், புலவர் கார்த்தியாயினி, கோ.கருணாநிதி, நெருப்பலை பாலவர் இரா.இளங்கோவன், சிவராமன் ஹரிஷரன், பூபதி, கர்நாடகத் தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்துமணி நன்னன், செயலாளர் மதியழகன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வின் நிறைவில் சங்கத்தின் பொருளாளர்4 க.தினகரவேலு நன்றி கூறினார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்