பெங்களூரு, ஜூலை 30: மடிவாளா வி.பி.சாலையில் ஸ்ரீ முலுகண்டம்மா தேவி ஆலயத்தின் 40வது ஆண்டு ஆடி கரக திருவிழா சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பெங்களூரு மடிவாளா வி.பி.சாலையில் ஸ்ரீ முலுகண்டம்மா தேவி ஆலயத்தின் 40வது ஆண்டு ஆடி கரக திருவிழா சிறப்பான முறையில் தொடங்கி, நடைபெற்று வருகிறது. ஜூலை 28 ஆம் தேதி தொடங்கிய இந்த திருவிழா ஜூலை 30 ஆம் தேதி நிறைவடைக்கிறது.

முன்னதாக ஜூலை 28 ஆம் தேதி காலைஸ்ரீ முலுகண்டம்மா கோவிலில் இருந்து அம்மன் சிலையை எடுத்து வந்து வி.பி.ரோடு, 2வது கிராஸில் அமரவைத்து, மதியம் 12 மணி அளவில் அம்மனுக்கு மஹா தீப ஆராதனையும், மாலை சுமங்கலி பூஜை நடைபெற்றது.

ஜூலை 29 காலை 9 மணிக்கு பழைய மடிவாளம் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் இருந்து சக்தி பூகரகத்துடன் பம்மை சிலம்புடன் மேளதாள வாத்தியத்துடன் ஸ்ரீ வீரபத்திரசாமியுடன் முக்கிய வீதிகளில் உலா வந்து, மதியம் ஸ்ரீ முலுகண்டம்மா கோவிலில் கூழ் ஊற்றி, மாலை 6 மணி அளவில் மஹா தீப ஆராதனை நடைபெற்றது.

இதனிடையே 3 ஆம் நாளான ஜூலை 30 காலை 8 மணி அளவில் மஹா தீப ஆராதனை நடைபெறும். மதியம் 11.00 மணிஅளவில் வி.பி. ரோடு 2வது கிராஸில் மஹா அன்னதானம் நடைபெறும். மாலை 6.00 மணி அளவில் ஸ்ரீ முலுகண்டம்மா தேவி உற்ச்சவமூர்த்தி மேளதாளத்துடன் பூபல்லக்கியுடன் வீதி உலா நடைபெறும்.

திருவிழாவிற்கு பக்தகோடிகள், மடிவாளா பொதுமக்கள் அனைவரும் திரளாக வந்து சிறப்பாக நடத்திக் கொடுக்குமாறு மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என வி.பி.ரோடு, மடிவாளா ஸ்ரீ முலுகண்டம்மா தேவி ஆலயத்தின் திருவிழா நிர்வாகிகள் கேட்டிக் கொண்டனர். திருவிழாவில் முன்னாள் மேயர் மஞ்சுத்ரெட்டி,மடிவாளாவைச் சேர்ந்த மனோகரன், கிருஷ்ணமூர்த்தி, பக்தவச்சலம், பரசுராம், சீனா, வேணுகோபால், சரவணனன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.































































