பெங்களூரு, டிச. 1: பெங்களூரு ஜே.சி.சாலை, ரவீந்திர காலாக்ஷேத்ராவில் உள்ள நயனா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 30) ஸ்ரீ நிருத்யாலயா ஆர்ட் ஆஃப் டான்ஸ் அகாடமியின் ஆண்டு விழாவில் மாணவர்களின் சிறப்பு நடனங்கள் நடைபெற்றன. இதில் நாகேஷ், எம்ஜிஆர் மணி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
பெங்களூருவைச் சேர்ந்த திருமதி சுப்புலட்சுமி ஞானசேகர் தலைமையிலான ஸ்ரீ நிருத்யாலயா ஆர்ட் ஆஃப் டான்ஸ் அகாடமியின் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை ஜே.சி.சாலை, ரவீந்திர காலாக்ஷேத்ராவில் உள்ள நயனா அரங்கில் நடைபெற்றது.
இதில் அகாடமியின் நடனம் பயிலும் பல மாணவர்களின் சிவன், முருகன், அம்பாள், நாகம், தசாவதாரம், காந்தாரா உள்ளிட்ட பல்வேறு நடனங்களை குமாரி நிவாஷ்னி, ஹாசினி, இந்து, நிஷிதா, ரீதிகா, தேஜஸ்வினி, சாரிகா சாயி, யுக்தாஸ்ரீ, அக்ஷரா சுரேந்தர், சைதன்யா. எம், தாத்திரி, ஹாசினி. வி, ஹாசினி பி அர்ஸ், ஹிஷிதா. சி.எச்., இந்து. எஸ், ஜெஸ்விதா. பி, குஷ்விதா. எம், கவிஸ்ரீ, மைரா கத்தாரினா, நிஷா ஜி,
நிவிஷா ஜெயின்,

நிஷிதா. கே, நிஷிதா. எஸ், பிரிஷா ஜெயின், ரீத்திகா. எஸ், ஷரிகா சாயீ. என், சோனாக்ஷி. எஸ், தோஷிகா. ஜி, தேஜஸ்வரி. ஆர்.எஸ், தனிஷ்கா. எம், வர்ஷினி. எஸ். வெர்னிகாபிரதான். வி, யுக்த ஸ்ரீ. எம், நிவாஸ்னி. ஜி ஆகியோரின் நடனங்கள் இடம்பெற்றன. இது பார்வையாளர்கள், சிறப்பு பங்கேற்பாளர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரையும் வெகுவாக கவர்ந்தன.
நிகழ்வில், கன்னட ஞானபதா பரிஷத்தின் மாவட்ட தலைவர் நாகேஷ், ஊரிகே உபகாரி டாக்டர் விஷ்ணுவர்த்தன் ரசிகர் மன்றத்தின் தலைவர் சுப்ரமணி நாயுடு (எ) எம்ஜிஆர் மணி, பேராசிரியர் ஜி.இ.பிரகாஷ், நம்ம கர்நாடக சேனேவின் மாநிலத் தலைவர் பசவராஜ் படகோட்டே, சமூக செயற்பாட்டாளர் அனிதா, நடிகர் பார்கவ், நடிகை, தாயாரிப்பாளர், இயக்குனர் கௌரிஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நட்டுவாங்கம், நடன பாடல்களை சின்னமனூர் விஜயலட்சுமி, சுப்புலட்சுமி ஆகியோரும், மிருதங்கத்தை திருகோவிலூர் தேவநாதனும், வயலினை கேசவன் ஆகியோரும் வாசித்தனர். நடன ஆடைகளை கம்மனஹள்ளி மெல்வின் ஜோனா காஸ்டியூம்வினரும், மேக்கப்பை சிவகுமாரும், கலையை மஞ்சுநாத்தும், நடன அறிமுகத்தை அல்டோ ப்ரீத்தியும், நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஞானசேகரும் செய்திருந்தனர்.

நிகழ்வு குறித்து திருமதி சுப்புலட்சுமி ஞானசேகர் கூறியது: 1980 ஆம் ஆண்டு நான் சென்னையில் வசித்தபோது, 10 வயதில், கும்பகோணத்தைச் சேர்ந்த குரு முருகேஷ் வழுவூர் ராமையா பிள்ளையின் சீடரின் வழிகாட்டுதலின் கீழ் நடனம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, எனவே நடனத்தைக் கற்கத் தொடங்கினேன். 1990 ஆம் ஆண்டு நான் நடனக் கற்றலை முடித்தேன். பின்னர் ஆசிரியராக என் வாழ்க்கையைத் தொடங்கினேன், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு நடனத்தை கற்பித்தேன். 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு பெங்களூருக்கு குடிபெயர்ந்தேன், அன்றிலிருந்து 2013 ஆம் ஆண்டு வரை, என் நடன வாழ்க்கையை நான் திரும்பிப் பார்க்கவில்லை.
2015 ஆம் ஆண்டு எனது குரு ஸ்ரீமதி கீதா ஸ்ரீநாத்தை சந்தித்தேன். அவரது வழிகாட்டுதலின் கீழ் நான் தேர்வுகளை எழுதி தகுதிவாய்ந்த இந்திய பாரம்பரிய நடன ஆசிரியரானேன். கடவுளின் அருளாலும் என் கணவரின் ஆதரவாலும் ஸ்ரீ நிருத்யாலயா கலை நடன அகாடமி என்ற பெயரில் எனது சொந்த நடனப் பள்ளியைத் தொடங்க முடிந்தது.
பெங்களூரு தமிழ் சங்கம் மற்றும் பெங்களூருவைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் உள்ள பிற மாணவர்களுக்கும் நான் நடனம் கற்பிக்கிறேன். மேலும் தொலைதூர மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளையும் நடத்துகிறேன். சமூக சேவை செய்வதைப் போலவே, இன்று நான் மனித உரிமை ஆணையத்தில் மகளிர் பிரிவுத் தலைவராகவும், லயன்ஸ் கிளப்பின் உறுப்பினராகவும் இருக்கிறேன்.

பெங்களூரு மட்டுமின்றி, சிதம்பரம், வழுவூர், சிக்கபாள்ளாபூர், சென்னை, வேலூர் மற்றும் பிற இடங்களிலும் நாங்கள் நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளோம். நடனத்தின் மகிமைக்காகவும், இளைய தலைமுறையின் நடனத் திறனை மேம்படுத்தவும் நான் தொடர்ந்து பாடுபடுவேன். ஆண்டு விழாவிற்கு வருகை புரிந்து, மாணவர்கள் ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி. எனது பணியை தொடர்ந்து செய்வேன். எனக்கும் அனைவரும் ஆக்கமும், ஊக்கமும் அளிக்க வேண்டும் என்றார்.































































