பெங்களூரு, மார்ச் 18: பெங்களூரு மாவட்ட ரஜ்புத் சங்க மகளிர் அணி சார்பில் மகளிர் தின விழா ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) கொண்டாடப்பட்டது. விழாவில் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைப்பட, சின்னத்திரை நடிகை மற்றும் கர்நாடக ராஜ்யோத்சவா விருது பெற்றவருமான விஜயலக்ஷ்மிசிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பெங்களூரு வசந்த்நகரில் உள்ள ரஜ்புத் சங்க வளாகத்தில் மார்ச் 15 ஆம் தேதி, சங்கத்தின் மகளிர் அணி பிரிவு சார்பில் அணியில் முக்கிய நிர்வாகி ஷோபா அவர்களின் தலைமையில், துர்கா பாலாஜிசிங், மதுமதிபாய், கோமல், லக்ஷ்மி ஆர் சிங், ஆஷா, ரேகா ஆகியோரின் ஒத்துழைப்பில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் ரஜ்புத் சங்கத்தின் தலைவர் அஜித்சிங், துணைத் தலைவர் டி.ஆர்.பாலாஜிசிங், பொதுச் செயலாளர் மற்றும் வழக்கறிஞர் ஆர்.பாலாஜிசிங், பொருளாளர் தினேஷ்சிங் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் குடும்பம், குடும்பமாய் விழாவில் கலந்து கொண்டனர்.

மகளிர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைப்பட, சின்னத்திரை நடிகை மற்றும் கர்நாடக ராஜ்யோத்சவா விருது பெற்றவருமான விஜயலக்ஷ்மிசிங் கலந்து கொண்டார்.
விழாவில் ரஜ்புத் சங்க வளர்ச்சிக்கு பாடுபட்ட, மகளிர் அணியில் மூத்த உறுப்பினரும், மறைந்த பி.ஜி. லீலாதர்சிங்கின் மனைவியுமான திருமதி பிரமிளா எல் சிங், மூத்த உறுப்பினரும், மறைந்த ஆர். பிரகாஷ்சிங்கின் மனைவியுமான மஞ்சுளா பி சிங் மற்றும் மறைந்த சரவண்சிங்கின் மனைவியும், மூத்த உறுப்பினருமான ஷிவராணி பாய் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

மகளிர் தினத்தையொட்டி, வேடிக்கை செயல்பாடுகள், விளையாட்டுகள் நடைபெற்றது. இதில் பங்கு பெற்றவர்கள் பரிசுகள் வழங்கப்பட்டது. ரஜ்புத் சங்க மகளிர் அணி சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.































































