முகப்பு Health உணவே மருந்து; மருந்தே உணவாகும் — இந்த பழமொழி சோதனை மூலம் மீண்டும் நிரூபணம்

உணவே மருந்து; மருந்தே உணவாகும் — இந்த பழமொழி சோதனை மூலம் மீண்டும் நிரூபணம்

114
0

சென்னை: ஜெஸ்டேஷனல் டயபட்டீஸ் (கர்ப்பகாலநீரிழிவுநோய்) உள்ள தாய்மார்களின் பாலை ஆராய்ந்த ஆய்வில், அந்த பால் சில சீரான மாற்றங்களுடன் குழந்தைகளுக்கு நன்மை தரும் வகையில் இருக்கிறது என தெரியவந்துள்ளது. இது எதிர்பாராத முடிவாகும். இந்த தாய்களின் பால், குழந்தைகள் வேகமாக வளர்வதற்கும், குறைவான கொழுப்புடன் வளரும் வகைக்கும் உதவுகிறது.

ஓய்ல ஹோமா பல்கலைக்கழக பேராசிரியர் பில்ட்ஸ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பால் ஆய்வில், “பால் என்பது மருந்து” என்ற நுண்ணறிவை வலியுறுத்துகிறது. தாயின் உணவு முறை, வாழ்க்கைமுறை ஆகியவை பாலின் வாயிலாக குழந்தைக்கு அறிவுறுத்தப்படுகின்றன. இது தமிழர்களின் பாரம்பரிய அறிவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. உணவே மருந்து; மருந்தே உணவாகும்.

“தாயைப் போல பிள்ளை; நூலைப் போலச் சீலை” — இந்த தமிழ்ப் பழமொழி, தாய்-குழந்தை உறவின் இனைவையும் தாக்கத்தையும் அறிவியல் ஆய்வுகள் மீண்டும் சுட்டிக்காட்டுகின்றன.
பாலூட்டும் நேரத்தில் தோல்-தோலான தொடுதலால் தூண்டப்படும் ஆக்சிடோசின் ஹார்மோன், பால் வெளியேற்றத்தை (‘let-down reflex’) ஏற்படுத்துவதுடன், தாயின் மன அழுத்தத்தை குறைத்து, குழந்தையுடன் நெருக்கமான பிணைப்பையும் ஏற்படுத்துகிறது.

இங்கிலாந்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பிறப்புக்குப் பிறகு மனச் சோர்வை அனுபவிக்கும் தாய்மார்களில், ஆக்சிடோசின் எதிர்வினை குறைவாகவே இருந்தது. இது குழந்தையின் சமூக உணர்வுகள் மற்றும் எதிர்கால மனநலனில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

“தாயைப் போல பிள்ளை; நூலைப் போலச் சீலை”என்பது போல், தாயின் உடல் மனநிலை, அவரது பாலை ஊடாகவே குழந்தையின் வளர்ச்சியை வடிவமைக்கிறது.

பாசத்தில் கலந்த பால் போதுமா செல்லமே உனக்கு?” — இதயத்தில் பதிந்த தாய்மையின் கேள்வி.
பாலூட்டும் தாய்மாருக்கு குழந்தை எவ்வளவு பால் குடித்தது என்பதை துல்லியமாக தெரிந்து கொள்வது ஒரு பெரிய சவாலாக இருந்து வந்தது.“இனி கவலை வேண்டாம்”
இந்தக் குழப்பத்தை தீர்க்க, நார்த் வெஸ்ட்ரன் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் மருத்துவ நிபுணர்கள் புதிய கருவியொன்றை உருவாக்கியுள்ளனர். இந்த மென்மையான தொக்கிகருவி, தாயின் மார்பை சுற்றி பொருந்தி, குழந்தை குடிக்கும் பாலை நேரடியாக கணக்கிட்டு மொபைல் சாதனத்தில் காட்டுகிறது.

இந்த நவீன தொழில் நுட்பம், தாய்மாருக்கு நிம்மதி மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கு துல்லியமான தகவல் வழங்குகிறது. குறிப்பாக, நியோநேடல் ஐ.சி.யூ.வில் இருக்கும் உடல் எடை குறைந்த குழந்தைக்கு இது சிறந்த சேவையாக அமையும்.

பாலூட்டும் காலத்தில் வரும் சந்தேகங்களை குறைத்து, தாய்மார்கள் தங்களின் பாலூட்டல் இலக்குகளை எட்டுவதற்கு இந்த கருவி ஒரு நம்பிக்கையான உதவியாய் அமைகிறது. இது குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு, தாயின் மனநலத்திற்கு, மேலும் சமூக நலத்திற்கும் வழிவகுக்கும்.

பாலூட்டும் தாய்மையால் உடல் எடையை கட்டுப்படுத்த இயலும் – அறிவியல்சொல்கிறது!
அமெரிக்காவின் பேலர் மருத்துவக் கல்லூரி மற்றும் பென்னிங்டன் உயிரி மருத்துவ ஆராய்ச்சி மையம் ஆகியவை நடத்திய சமீபத்திய ஆய்வில், பாலூட்டும் தாய்மாரில் எஸ்ட்ரஜன் ஹார்மோன் குறையும்போது, மூளையில் உள்ள எரா நியூரான்கள் (Estrogen Receptor alpha neurons)பசியைகட்டுப்படுத்தி, கொழுப்பு எரிதலை (fat burning)தூண்டி, உடல் எடையை சமநிலைப்படுத்தும் இயற்கையான முறையை இயக்குவதைத் தெரியப்படுத்தியுள்ளது.

இந்த ஆய்வு என்ன கூறுகிறது?
•பாலூட்டும் காலத்தில், எஸ்ட்ரஜன் என்ற ஹார்மோன் குறைகிறது.
•அதே நேரத்தில், ப்ரொலாக்டின் என்ற பால் உற்பத்திக்கு உதவும் ஹார்மோன் அதிகரிக்கிறது.
•தாய்மார்கள் பாலூட்டும் நேரத்தில் மூளையின் ERα நியூரான்கள் இயங்குதிறன் குறைவாக இருக்கும்.
•இது புரோலாக்டின் அளவை உயர்த்தி, உணர்வு அதிகரிப்பையும் கொழுப்பு சேமிப்பையும் ஏற்படுத்துகிறது.
•இது தாய்க்கு தேவையான சக்தியை உறுதிப்படுத்தி, நீடித்த உடல் எடை சமநிலைக்கு பயனளிக்கிறது.

இந்த அறிவியல் முடிவு பாலூட்டும் காலத்தில் தாய்மாருக்கு நிலையான உடல் எடை, வயதான பிறகு உடல் சீராக்கம், மற்றும் மெனோபாஸ் பாதிப்புகளைத் தவிர்க்கும் நன்மைகளை வழங்குகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.

தாய்மையின் உண்மையான நன்மை – குழந்தைக்கும், தாய்க்கும்!
“பால் கொடுக்கும் ஒவ்வொரு தாயும், தன்னை சீராக பராமரிக்கும் ஒரு அறிவியல் சக்தியை இயற்கையாக கொண்டவராகிறார்”.

இனி கவலை வேண்டாம் – உங்கள் உடலே உங்கள் நலனுக்குப் பணிகிறது!

ஆராய்ச்சி ஆதாரங்களைக் கொண்டு தொகுத்தவர்:
ஜாய் சந்தியா, பிஎச்.டி ( நர்சிங்)
இணை பேராசிரியர், நர்சிங் கல்லூரி
ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (SRIHER)

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்