பெங்களூரு, ஆக. 16: பெங்களூரு ஸ்ரீராமபுரம் சாய்பாபாநகர் சாய்பாபா நல சங்க மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 17) மெகா வேலை வாய்ப்பு முகாம்–2025 நடைபெறுகிறது. முகாமில் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள சுமார் 5 ஆயிரம் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு: லிட்டில் பிளவர் மேல் நிலைப்பள்ளி, கர்நாடக தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் ஆகியவை இணைந்து, தமிழ்நாடு அரசின் ஆதரவுடன் நடத்தும் இந்த மெகா வேலை வாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
முகாமில் நேர்காணலில் தேர்வு பெறும் தகுதி உள்ளவர்களுக்கு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள சுமார் 5 ஆயிரம் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது. இதில் செவிலியர்கள், பி.இ., டிப்ளமோ/ஐடிஐ, பட்டதாரிகள், ஹோட்டல் மேலாண்மை, திறமையான தொழில்களுக்கான வேலைகள், நேர்காணல் நடைபெறும் இடத்திலேயே வழங்கப்பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு 95148 38485 / 98432 12111 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


























































