முகப்பு Bengaluru கவச் அறக்கட்டளை சார்பில் பிடிஎம் லேஅவுட்டில் விழிப்புணர்வு நடைப்பயணம் மற்றும் மரம் நடும் நிகழ்ச்சி

கவச் அறக்கட்டளை சார்பில் பிடிஎம் லேஅவுட்டில் விழிப்புணர்வு நடைப்பயணம் மற்றும் மரம் நடும் நிகழ்ச்சி

2
0

பெங்களூரு, ஜூன் 5: சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், உலக சுற்றுச்சூழல் தினத்தின் ஒரு பகுதியாக, கவச் அறக்கட்டளை சார்பில் பிடிஎம் லேஅவுட்டில் ஒரு நடைப்பயணம் மற்றும் மரம் நடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில், கர்நாடக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைமைக் கொறடாவும், சட்டசபை மேலவை உறுப்பினருமான என். ரவிகுமார், கர்நாடக மாநில பாஜக செயலாளர் வினய் பித்ரே, கே. தேவதாஸ், சந்திரசேகர் ராஜு, கார்த்திக் தர்ஷன், மஞ்சுநாத், அவினாஷ், மோகன், ராஜேந்திர ரெட்டி, சீனிவாஸ் கௌடா, பிரதிபா, வாணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்