முகப்பு Bengaluru கர்நாடகத்தில் தமிழர்கள் ஒன்று திரள்வது மகிழ்ச்சி அளிக்கிறது: பைய‌ப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ்

கர்நாடகத்தில் தமிழர்கள் ஒன்று திரள்வது மகிழ்ச்சி அளிக்கிறது: பைய‌ப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ்

4
0

பெங்களூரு, நவ. 23: கர்நாடகத்தில் தமிழர்கள் நடத்தும் பல நிகழ்வுகளில் தமிழர்கள் ஒன்று திரள்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பைய‌ப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் தெரிவித்தார்.

பெங்களூரு அல்சூரு ஏரிக்கரை அருகே உள்ள திருவள்ளுவர் சிலை அருகே நவ. 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பைய‌ப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் தலைமையில் விசுவகவி திருவள்ளுவர் சங்கத்தின் சார்பில் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி நடைபெறும் திருவள்ளுவர் தின விழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், கடந்த ஆண்டு திருவள்ளுவர் தின நிகழ்வில் சுமார் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டுள்ளனர். ஆனால் கூடும் கூட்டம் திருவள்ளுவருக்கு மாலை அணிவித்தவுடன் கலைந்து செல்வதால், அது குறைவான எண்ணிக்கைப் போல தெரிகிறது. ஆனால் தொடர்ந்து கர்நாடகத்தில் தமிழர்கள் நடத்தும் அனைத்து நிகழ்வுகளிலும் கூடும் கூட்டத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது.

பெங்களூரு அல்சூரு ஏரிக்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு 2027 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை கோலகலமாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம். இதில் கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடு, புதுச்சேரி கேரளம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட இந்தியா முழுவதிலிருந்தும், சுமார் 1 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இது சாத்தியமாவதற்கான காலம் கனிந்து வருகிறது.

திருவள்ளுவர் தின விழாவில் தமிழர்கள் மட்டுமின்றி கன்னட, தெலுங்கு, மலையாளம் பேசும் சகோதரர்களும் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றார். ஆலோசனைக்கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள், தி.கோ.தாமோதரன், வா.ஸ்ரீதரன், கோபிநாத் உள்பட ந.இராமசாமி, நெருப்பலையார் இராம. இளங்கோவன், விஸ்வநாதன், மேக்லின், நடராஜ், குணசேகர், விஜயகுமார், ராஜகுரு உள்ளிட்ட பல்வேறு தமிழ் ஆர்வலர்கள், அமைப்பினர், மகளிர், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்