பெங்களூரு: இந்தியாவில் கண்புரையால் பார்வை இழப்பு ஏற்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த கண்புரை பார்வை இழப்பை தடுக்க அரசும், தனியார் மருத்துவமனைகளும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இதை மருந்துகள் மூலமோ ஊசிகள் மூலமோ தடுக்க முடியாது. அறுவை சிகிச்சை மட்டுமே சரியான தீர்வாக உள்ளது. ஆனால் அறுவை சிகிச்சை செய்து கொள்வோர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
இந்தியாவில் கண்புரை நோயால் பாதிக்கபடுவோர்.
2001- ம் ஆண்டில் 33.8 லட்சம்
2020- ம் ஆண்டில் 76.3 லட்சம்.
2020 – ம் ஆண்டில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 76 லட்சமாக அதிகரித்துள்ளது.
மேலும், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை சற்று உயர்ந்து வருகிறது.
கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள்
2001- ம் ஆண்டில் 24025 (ஒரு லட்சத்திற்கு)
2020- ம் ஆண்டில் 27817 (ஒரு லட்சத்திற்கு)
இருந்தாலும் நிறைய மக்கள் கண்புரை அறுவைசிகிச்சை செய்து கொள்வதில் இன்றும் ஒரு தயக்கம் இருந்து
கொண்டேதான் இருக்கிறது. 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தயக்கம் கட்டாமல் அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

சிறப்பு முகாம் (25.7.2025 முதல் 31.7.2025 வரை )
மேலும் வாஸன் கண் மருத்துமனையில் வருகிற 25 முதல் 31 வரை 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச கண்புரை பரிசோதனை முகாம் மற்றும் 20 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு லேசிக் / கான்டூரா பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.
ரூ. 5000 பரிசோதனை மருந்து இலவசம்
இம்முகாமில் கலந்து கொள்வோர்க்கு ரூபாய் 5000/- மதிப்புள்ள பரிசோதனைகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு முன் தேவைபடும் மருந்துகளும் இலவசமாக கொடுக்கப் படுகிறது. எங்கள் மருத்துவமனை மத்திய மாநிலஅரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து காப்பபீட்டு நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையாகும். எனவே அரசு மற்றும் தனியார் காப்பீட்டு அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வாஸன் கண் மருத்துவமனையை நேரில் அணுகவும்.































































